ஏன் ஸ்ருதி.. கடற்கரையில் இப்படி போஸ் கொடுத்தா கடலே ஷாக் ஆய்டாது..!
சென்னை: மனசு லேசா இருந்தாலே நாம செய்யும் எல்லா வேலையும் சிறப்பாக நடக்கும் என்பார்கள். காரணம், மனசு கொடுக்கும் உற்சாகம்தான் நம்மை யோசிக்க வைத்து, செய்யும் வேலையை சிறப்பாக முடிக்கவும் வைக்கும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு விதமாக பாடங்களைக் கற்றுக்கொண்டு அனைவரும் கடந்து கொண்டு தான் சென்று கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று இருக்கும் இந்த நோயும் கடந்து சென்று விடலாம் என்று நம்புகிறோம்.
எவ்வளவு பிஸி லைஃப்ல ஓடிக்கிட்டு இருந்தவர்களையும் இன்று நிதானமாக வீட்டில் இருக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இணையதளங்கள் தான்.

மக்களுடன் தொடர்பில்
சினிமா துறையினர் தங்களுடைய நடிப்புகளையும், திறமைகளையும் அதில் தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் நாதஸ்வரம் சீரியல் மூலமாக அறிமுகமான ஸ்ருதி சண்முகப்பிரியா தன்னுடைய போட்டோக்களை இணையதளத்தில் தொடர்ந்து போட்டு மக்களுடன் எப்போதும் கனெக்ட்டில் இருக்கிறார். பல நேரம் அவை வைரலாகவும் செய்யும்.

சூப்பர் ராகினி
ஸ்ருதி, திருமுருகன் இயக்கி நடித்த நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற கேரக்டரில் கோபியின் தங்கையாக நடித்து இருப்பார். இந்த கேரக்டரில் அவர் நடித்தார் என்று சொல்வதை விட ராகினியாக எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்று வரையிலும் சில ரசிகர்கள் இவரை ராகினி என்றுதான் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு அந்த நீண்ட நெடுந்தொடரில் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

மக்கள் மனதில் ஸ்ருதி
நடித்த முதல் சீரியலிலேயே மக்களின் மனதில் பச்செக்கன்று உட்கார்ந்த வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். காரணம் இயல்பான நடிப்பு மட்டுமல்லாமல் பாந்தமான பேச்சும் கூட. நம்ம வீட்டுப் பொண்ணு என்று நினைக்கும் அளவிலான முகவெட்டும் இவருக்கு சாதகமாக அமைந்தது. அந்த சீரியலுக்கு பிறகு இவர் நடித்த எல்லா சீரியல்களுமே இவருக்கு சூப்பர் டூப்பர் தான்.

வாணி ராணியில் சூப்பர்
வாணிராணியில் அசத்தினார். பொண்ணுஞ்சல், பாரதிகண்ணம்மா என பல சீரியல்களில் கலக்கினார். இந்த சீரியல்கள் மூலமாக தனக்கு ரசிகர்கள் கூட்டத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டே போனார் ஸ்ருதி. இதுபோக வெள்ளித்திரையில் தனுஷ் கூட கோடி படத்தில் நடித்து வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் குறும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படிப்பிலும் கெட்டி
தங்கச்சிக்கு கல்யாணம், இருமுனை கத்தி போன்ற குறும்படங்களில் நடித்துள்ளார். இந்த குறும் படங்களுக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறத. இந்த நிலைமையில்தான் எல்லாரும் வீட்டில் இருக்கும் நிலைமையில் இவங்க இவர் விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். இது வைரலாக பரவி வருகிறது. ஸ்ருதி கோயம்புத்தூர் பொண்ணு தான். அங்கதான் ஹையர் செகண்டரி வரைக்கும் முடித்திருக்கிறார். அதன் பிறகு எம்பிஏ வரைக்கும் படித்திருக்கிறார்.

பெரிய மச்சம்
சீரியலில் பிசியாக இருந்தாலும் படிப்பிலும் கவனமாக இருந்திருக்கிறார். படிப்பிலும் இவர் படுசுட்டி நாதஸ்வரம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது படிப்பையும் கவனமாக முடித்து இருக்கிறார். அந்த சீரியலில் அவர் கோபியின் செல்ல தங்கையாக அழகாக வந்திருப்பார். அந்த கன்னத்தில் இருக்கும் மச்சம் தான் இவருக்கு பிளஸ் பாயிண்ட். டெய்லி இவங்களை பாத்துக்கிட்டு இருந்த ரசிகர்கள் இந்த சீரியல் முடிந்ததும் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணுகிறார்களாம். அந்த அளவுக்கு ராகினி கேரக்டர் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

கடலோரத்தில் ஒரு தரிசனம்
இனயதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட் போட்டாஸ் களையெல்லாம் அப்லோட் பண்ணியிருக்கிறார். போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் மழை பொழிகிறார்கள். கடற்கரையில் கடலின் வாசனையும் வானத்தின் உணர்வும் உங்கள் ஆத்மாவும் ஆவிகளும் பறக்கட்டும். அழகான கடற்கரை அதிர்வுகள் சீரற்ற உரைத்த பாடல் மற்றும் கடலோர நினைவுகள் என்று ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். இது ரசிகர்களை கலகலப்பாக்கியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications