ஸ்டார் ஓட்டலில் சிரிப்பு நடிகை சிக்கி.. ஹோம் டூர் வீடியோ பிரபலத்துக்கு வந்த நடுக்கம்.. கருப்பு பணம்?
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னையில் நேற்று, நடிகை அருணா வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், சோதனையின் பின்னணி குறித்தும் அமலாக்கத் துறை அதிகாரிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.. இந்நிலையில், சில நடிகைகள், அரசியவாதிகளின் பாதுகாப்பை நாடுவது ஏன்? என்பது குறித்தெல்லாம் மூத்த பத்திரிகையாளர் சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது.
ஆந்திர மாநில நடிகையான அருணாவை, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குப்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இவர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள் அலங்கார பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த மாநிலங்களிலும் நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள்
அவரது நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றதையடுத்து, நேற்று 2 கார்களில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள், அருணா வீட்டில், காலை 7:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை சோதனை நடத்தினார்கள்.. அதில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், சோதனையின் பின்னணி குறித்தும் அமலாக்கத் துறை அதிகாரிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.
சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு தன்னுடைய வீடு குறித்தும், அதில் சமையலறை எவ்வளவு பெரியது என்பது குறித்தும், அருணா பல தகவல்களை தெரிவித்து இருந்தார்.. அப்போதே, அருணாவின் சொகுசு பங்களாவை பார்த்து பலரும் வியந்தனர். இப்போது அருணா வீட்டில் ரெய்டு என்பதால், ஹோம் டூர் வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்த, சில யூடியூப் பிரபலங்களை அச்சப்பட வைத்திருக்கிறதாம்.
நடிகைகள் வீட்டில் ரெய்டு
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலில் பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் நடிகை அருணா கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானார்.. அருணாவின் தங்கையும் ஒரு நடிகைதான்.. சுமார் 20 படங்கள் நடித்திருப்பார் அருணா..
பிறகு கோடீஸ்வரர் மோகன் குப்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.. இன்டீரியர் டெக்கரேஷன் கம்பெனி வைத்து, கோடிக்கணக்கான பங்களாக்களில் இன்டீரியர் ஒர்க் செய்பவர்.. நன்றாக காசு வருகிறது..
ஆனால், சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறி அருணா வீட்டில் இந்த ரெயிடு நடந்துள்ளது.. கணக்கில் வராத பணத்தை அருணாவின் கணவர் வாங்கியதாக புகார் கிளம்பியதால் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது..
நீலாங்கரை வீட்டில்
நீலாங்கரையிலுள்ள கபாலீஸ்வரர் நகரில்தான் அருணாவின் வீடு உள்ளது.. இங்கு வசிப்பவர்கள் எல்லாருமே மல்ட்டி மில்லியனர்தான்.. இந்த சோதனை முடிய 2, 3 நாட்கள் ஆகும்.. அதற்கு பிறகே சோதனை குறித்த முடிவுகளை சொல்வோம் என்று அதிகாரிகள் சொல்லியுள்ளதால், தற்போதும் ரெய்டு நடந்து வருகிறது.
பெரும்பாலும் நடிகைகளை திருமணம் செய்பவர்கள் கோடீஸ்வரர்கள்.. எம்ஆர் ராதா ஒருமுறை சொன்னார், உனக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்று கோர்ட்டில் நீதிபதி கேட்டாராம்.. மனைவியின் வருமானம் என்றாராம் கணவர்..
கருப்பு பணம் - வெள்ளை பணம்
அதுபோல தங்களிடமுள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ள, நடிகைகளை திருமணம் செய்ய தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.. உதாரணத்துக்கு நடிகை பல படங்களில் நடித்த வருமானம் என்று சொல்லி, தங்களிமுள்ள வருமானத்தை காட்டிக்கொள்ளக்கூடும். ஆனால், வருமானவரியை முறையாக செலுத்தி வர வேண்டும.
சில நடிகைகள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்வது தவறு.. அப்படி இருக்கவும் முடியாது.. தேவைப்பட்டால் அரசியல்வாதிகளின் ஆதரவில், அரவணைப்பில், பாதுகாப்பில் வேண்டுமானால் இருக்கலாம்.. தங்களிடமுள்ள கோடிக்கணக்கான சொத்தினை பாதுகாத்து கொள்ளவே அரசியல் புள்ளிகளிடம், சிலர் பாதுகாப்பை கோரலாம்..
மத்திய அரசு
அந்தவகையில், மத்திய அமைச்சர்கள் அல்லது மத்திய அரசு அதிகாரிகள் பாதுகாப்பில் நடிகைகள் இருந்தால், அவர்களது வீடுகளுக்கு வருமான வரித்துறை ரெயிடு நடக்க வாய்ப்பில்லை..
நிலமோசடி தொடர்பாக நடிகை அதிமுக பாதுகாப்பை நாடினார்.. அதன்படியே குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.. அதேபோல சூரத்தை சேர்ந்த 3 எழுத்து, பாஜகவில் உள்ளார்.. தமிழகத்தில் ஆளும் கட்சி அல்லது மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு அது பாதுகாப்பாக அமையுமே தவிர, தனிப்பட்ட கட்சியாக இருந்தால் அந்த கட்சியின் பாதுகாப்பு பெரிதாக கிடைக்காது. ஆனால், நடிகை அருணா எந்த அரசியல் பின்னணியின் பாதுகாப்பிலும் இல்லாதவர் போல தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒருசேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "மத்திய அமைச்சராக உள்ள, ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியின் மகன் ஒருமுறை ஏடாகூடமாக சிக்கிவிட்டார்.
"சிரிப்பு"க்கு பெயர்போன ஒரு நடிகை, குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பார்.. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.. அந்த நடிகையின்மீது, அரசியல் வாரிசுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தால், குறிப்பிட்ட ஸ்டார் ஓட்டலுக்கு அரசியல் வாரிசும், சிரிப்பு நடிகையும் வந்து செல்வது வழக்கமாகவும் இருந்தது. இதற்கு மிகப்பெரிய தொகை நடிகைக்கு தரப்பட்டது.
அப்போது திடீரென ஓட்டலுக்கு ரெயிடு வந்து, இருவருமே சிக்கி கொண்டனர். பிறகு அப்போதைய முதலமைச்சரிடம் இந்த விஷயம் சென்றது.. இருவரையும் மன்னித்து அனுப்பி விடுங்கள் என்று உத்தரவிடப்பட்டதையடுத்து, இருவருமே விடுவிக்கப்பட்டனர். இப்படி பல்வேறு காலகட்டத்தில் பலமுறை, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நடிகைகளுடன் சிக்கியிருக்கிறார்கள்..
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications