விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் “எதிர்நீச்சல்” குணசேகரன்.. அதிரடி முடிவுக்கு காரணம் இதுதானா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்துக் கொண்டு இருக்கிறார் நடிகர் மாரிமுத்து.
சினிமாவில் முன்னணி கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து முதல்முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சியிலும் நடிகர் மாரிமுத்து கலந்து கொண்டிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக டிவி சேனல்களுக்குள் டிஆர்பி அடிப்படையில் தான் போட்டி அதிகமாக இருக்கிறது. ஒரு டிவி சேனலில் முன்னணியில் இருக்கும் நிகழ்ச்சியை காப்பி அடித்து அதற்கு போட்டியாக இருக்கும் பல சேனல்கள் புதியதாக நிகழ்ச்சியை தொடங்கி விடுவது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.
அதுபோல இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர்கள் போட்டியாக இருக்கும் சேனல்களில் களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் கொண்டாடப்படும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இப்போது பல சேனல்களில் அடுத்தடுத்து களமிறங்கி கொண்டிருக்கிறார்.

நடிகர் மாரிமுத்து இதுவரைக்கும் எத்தனையோ படங்களை இயக்கியும் நடித்தும் இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பேரும் புகழும் இப்போது அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் மூலமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் ட்ரெண்டிங் ஸ்டாராக மாரிமுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சன் டிவிக்கு போட்டியாக இருக்கும் விஜய் டிவியில் தொகுப்பாளர் பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் போட்டியாளராக மாரிமுத்துவை களம் இறக்கி இருக்கின்றனர்.
டி ஆர் பி ஐ கூட்டுவதற்காக சேனல் தரப்பில் இருந்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது வழக்கம்தான் அந்த வகையில் விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவியில் முன்னணியில் இருக்கும் சீரியல் நடிகர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த முறை எதிர்நீச்சல் சீரியல் குணசேகரன் மற்றும் அவருடைய அம்மாவாக நடிக்கும் நடிகை சத்யபிரியாவும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் இந்த வாரம் சினி அம்மா மற்றும் சினி அப்பா என்ற என்ற தலைப்பில் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகர் மாரிமுத்துவை கண்ட ரசிகர்கள் அதிகமானோர் "தெய்வமே நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா..?" என்று அதிர்ச்சியில் கேள்வி கேட்கின்றனர்.

ஏற்கனவே ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாரிமுத்து பேசியது இப்போ வரைக்கும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் எந்த பிரச்சனை வராமல் மாரிமுத்து நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்று பல கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications