ரோஜா வேஷம் கலைஞ்சு போச்சு.. கல்யாணம் நின்னு போச்சு #கல்யாணவீடு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கல்யாண வீடு சீரியல்..ரோஜா வேஷம் கலைஞ்சு போச்சு.. கல்யாணம் நின்னு போச்சு- வீடியோ

    சென்னை: இன்னிக்கு இல்ல, நேத்து இல்ல... 8 மாசமா இந்த மேட்டர் ஓடிட்டிருக்கு.

    சன் டிவியில் வரும் கல்யாண வீடு சீரியல் ரோஜா, ராஜாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு குறுக்கு வழியில பயணிக்க ஆரம்பிச்சது. என்ன ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் இந்த ரோஜா என்று முனுமுனுக்காத வாய்களே இல்லை.

    இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்கன்னு, கூட்டுக் குடும்பத்துல இருக்கும் பாட்டிகள், தங்களது பேத்தியை கண்ணும் கருத்துமா வாட்ச் பண்ணிகிட்டே இருக்காங்களாம். அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவர் இந்த ரோஜா

     அக்காவை கட்டிக்க ஆசை!

    அக்காவை கட்டிக்க ஆசை!

    ஐடி ஆஃபீஸ்ல வேலை பார்க்கற ரோஜாவுக்கு, தனக்கு மேல வேலை பார்க்கும் ராஜா மேல ஒரு கண்ணு. அதாங்க லவ்வு. ஆனா, ராஜா திருவையாத்துக்கு பொண்ணு பார்க்க வந்தது என்னவோ ரோஜா அக்கா சூர்யாவை. பொண்ணை ரொம்ப பிடிச்சுப் போக, கல்யாண ஏற்பாடுகளும் நடக்க ஆரம்பிக்குது.

     சதி ஆரம்பம்

    சதி ஆரம்பம்

    ஆனால் ரோஜா டென்ஷனாகி கொந்தளிக்கிறார். அதிரடி சதிகளை அவிழ்த்து விட ஆரம்பிக்கிறார். பிறகென்ன கடந்த 8 மாதமாக இந்த சதி வேலைகள் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன. கல்யாண வீடு களேபர களமாகி ரோஜா பண்ற அட்டூழியம் இருக்கே... இப்படியும் பொண்ணுங்க இருப்பாங்களான்ற அளவுக்கு.

     சின்னத்திரை ஹரி

    சின்னத்திரை ஹரி

    கல்யாண வீடு இயக்குனர் திருமுருகன் இருக்காரே இவர் வெள்ளித்திரை இயக்குநர் ஹரி மாதிரி. ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு எபிசோடுக்கும் திக் திக் டிவிஸ்ட்தான். அதிரடிதான். டிவியெல்லாம் பறக்காத குறைதான்.

     வேஷம் கலைஞ்சுது!

    வேஷம் கலைஞ்சுது!

    இப்போது ஒரு வழியா ரோஜா கெட்ட பொண்ணுன்னு தெரிஞ்சு போய், அக்காவைப் பொண்ணு பார்க்க வந்த ராஜாவுடன் நடக்க இருந்த கல்யாணம் நின்னு போச்சு, 8 மாச களேபரத்துக்குப் பின். இது ரோஜாவின் தோல்வியாச்சே.

     என்னவெல்லாம் நடந்துருச்சே..

    என்னவெல்லாம் நடந்துருச்சே..

    இந்த 8 மாசத்துக்குள்ள சூர்யா மனசுக்குள்ள கோபி புகுந்துவிட, சூர்யா தன்னுடன் மேடையில் பாடும் ஸ்வேதாவுக்கு கல்யாணம் பண்ணிக்கறதா வாக்கு கொடுத்துவிட, ரோஜா நிலைமை என்ன, கோபியை யாரு கல்யாணம் பண்ணிக்குவா? ஒரே பரபரப்பா போய்ட்டிருக்கு இந்த சீரியல்.

    நெஞ்சு படபடன்னு வருது...கல்யாண வீடு.. பேருதான் கல்யாண வீடு.. ஆனால் இன்னும் ஒரு கல்யாணமும் நடக்கலை.!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+