Metti Oli Serial: இல்லாத மாணிக்கத்தை இப்போதும் திட்டறாங்க!
சென்னை: சன் டிவியின் மெட்டி ஒலி சீரியல் இந்த லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பாகி வருது. கடந்த 15 வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் சீரியல் லிஸ்டில் இடம் பிடித்தது மெட்டி ஒலி. இந்த சீரியலில் அப்போது மாணிக்கத்தை திட்டியவர்கள் இப்போதும் திட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அன்றைய காலக்கட்டத்தில் சன் டிவியின் மாலை 7:30 மணி நேரத்தை மக்கள் விரும்பிப் பார்க்கும் பிரைமரி டைமாக்கியது மெட்டி ஒலி சீரியல்தான். குழந்தைகள் படிக்கும் இந்த நேரத்தில் தாய்மார்கள் சீரியலை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் தடுமாறித்தான் போனார்கள்.
மெட்டி ஒலி சீரியல் பார்க்க குழந்தைகளை அவசர அவசரமாக ஹோம் வொர்க் எழுத வைத்து. படிக்கவும் வைத்துவிட்டு, பாடங்களை மூட வைத்து சீரியல் பார்த்த குடும்ப பெண்கள் ஏராளம்.

ஐந்து பெண்கள்
சிதம்பரம் ஐயாவுக்கு ஐந்து பெண்கள் என்பதே இந்த சீரியலை பார்க்கும் ஆவலைத் தூண்டி விடுகிறது. இதை வைத்து அப்போது ஹிட் லிஸ்டில் இடம்பிடித்த மெட்டி ஒலி சீரியலில் ஐந்து பெண்கள் அற்புதமான பெண்களாக வளர்ந்தும். கல்யாண வாழக்கையில் எப்படி கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பது கதை.

அப்பா சிதம்பரம்
அப்பா சிதம்பரம் பெண்களை நன்றாக வளர்த்து இருக்கிறோம் என்கிற கனவில் மிதக்க. நான்காவது பெண் தவறு செய்து விடுகிறாள். மானஸ்தர் சிதம்பரம் இந்த விஷயம் தெரிந்து என்னவாகிறார் என்பதும் சீரியலின் எதிர்பார்ப்பு கதையாக இருக்கும்.

மாணிக்கம் நடத்தை
கல்யாண வயதைக் கடந்தும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் மாணிக்கத்துக்கு வெளிநாடு போயிருப்பவரின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டு போகிறது.அவனுக்கு சிதம்பரம் ஐயாவின் இரண்டாவது பெண் சரோவை கல்யாணம் செய்து வைக்க முதலிரவில் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு, துபாய்காரனின் பொண்டாட்டியை பார்க்க போய் விடுகிறான் மாணிக்கம்.

அப்பாவி மக்கள்
அப்பாவி மக்களுக்கு இது மறு ஒளிபரப்புன்னு தெரிந்தும் கூட மாணிக்கத்தை திட்டித் தீர்க்கிறார்கள். அடப்பாவி.. கட்டின பொண்டாட்டிய விட்டுட்டு இங்கே வந்துட்டானேன்னு இப்போதும் மாணிக்கத்தை திட்டித் தீர்க்கறாங்க. கதைப்படி பார்த்தாலும் கூட மாணிக்கம் கடைசியில் திருந்தி கதை முடிஞ்சே போச்சு...கெட்டவனா இல்லாத மாணிக்கத்தை இன்னும் திட்டித் தீர்க்கறாங்க.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications