ஸ்வேதா தன் புருஷனுடன் சேர்ந்தும் போஸ்டர் மாறலையே திருமுருகன்...?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கோபியின் மீது ஆசைப்பட்ட ஸ்வேதா தனது புருஷனோடு சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேலாகியும் இன்னமும் போஸ்டர் மாறின பாடில்லை.
சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் கதைப்படி நாயகன் கோபி கிருஷ்ணன் மீது சூரியாவும், ஸ்வேதாவும் ஆசைப்பட்டார்கள். போஸ்டரிலும் நாயகிகள், சூரியாவும் ஸ்வேதாவும் கோபி கிருஷ்ணனினின் இரு புறமும் நின்றபடி போஸ் கொடுத்து இருந்தார்கள். ஸ்வேதா ஒரு படி மேலே போயி கோபி மீது கை போட்ட படி போஸ் கொடுத்து நின்று இருந்தார்.

இப்போது ஸ்வேதா காணாமல் போன தனது கணவன் கிடைத்து விட அவரோடு சேர்ந்து விட்தோடு மட்டும் இன்றி இத்தனை ஆண்டுகள் பிரிந்து இருந்தது தாளாமல் தங்கள் கணவன் மனைவி என்பதற்கு அடையாளமாக கோயிலில் சுவாமி சன்னதியில் இன்னொரு கல்யாணமும் செய்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் போஸ்டரில் கோபி தோளில் ஸ்வேதா இன்னொருவன் மனைவி ஆன நிலையிலும் இன்னமும் கை போட்டு இருக்கும் போஸ்டரை ஒளிபரப்புவது முகம் சுளிக்க வைப்பதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய நிறுவனம் ஆன நிலையிலும் கவனக் குறைவாக இருப்பது நியாயம்தானா? இல்லை அலட்சியமா?
இது மட்டும் இன்றி கோபி கிருஷ்ணன் மீது தங்கையை கட்டிக் கொடுத்த வீட்டில் மாப்பிள்ளையின் தங்கை விடலைப் பருவ பெண் ஒருத்தி தன் மீது ஆசைப் படுவது போன்றும். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணை தனக்கு கட்டிக்கொடுக்க பெண்ணோட அம்மாவே ஆசைப்படுவது போன்றும் காண்பிப்பதும் அபத்தம்.
எதற்கும் ஒரு வயசு வேண்டாமா திருமுருகன்? சின்னத்திரை ரஜினிகாந்த் என்று உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டு இருந்தால் சாரி அதை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications