Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தமே இல்லாமல் சுனாமி மாதிரி வசூல் சாதனை செய்யும் கன்னட திரைப்படம்! "Su From So" விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட திரையுலகம் சமீபகாலமாக புதுமையான கதைகள், தரமான தயாரிப்புகளுடன் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில், ஜே.பி. தும்மிநாட் இயக்கத்தில், பிரபல இயக்குநரும், நடிகரான ராஜ் பி ஷெட்டி-யின் "லைட்டர் புத்தா ஃபிலிம்ஸ்" தயாரிப்பில் வெளிவந்திருக்கும் "Su From So" திரைப்படம், ஒரு அட்டகாசமான ஹாரர்-காமெடி அனுபவத்தை வழங்கியுள்ளது.

காந்தாரா-2 படத்திற்குள் தெரியாமல் வந்துவிட்டோமா என்று கண்ணை கசக்கி திரையை பார்த்து கன்பார்ம் செய்யும் அளவுக்கு, கதை நடைபெறும் வட்டாரம், நடிகர்கள் என பெரும்பாலும் காந்தாரா யுனிவர்ஸ்தான். பிற மொழி ரசிகர்களுக்கும் படத்தோடு உடனே கனெக்ட் ஆக இது உதவுகிறது.

review movie kannada

சாவு வீடு, கல்யாண வீடு போன்றவற்றில் நடைபெறும் நிகழ்வுகளை நகைச்சுவையாக கேன்டிட் கேமரா வைத்ததை போல நெருக்கமாக காட்டியது கதைக் கள பகுதிக்குள்ளேயே ரசிகர்களை அழைத்துச் சென்று இணைத்துவிடுகிறது. பார்க்க அழகாக இருக்கும் பெண்ணை பார்த்து நமது ஹீரோ போன் நம்பரை துண்டு சீட்டில் எழுதிப் போட அப்போது இருந்து படம், கதைக்குள் முழுக்க வர ஆரம்பிக்கிறது. இறந்த பெண்மணிக்கு படையல் வைத்து கதவை பூட்டி வைத்திருந்த சாவு வீட்டுக்குள், தனது, போனை எடுக்க அவசரப்பட்டு ஹீரோ நுழைய, அவர் உடம்புக்குள் ஆவி நுழைந்துவிட்டதாக ஊரே நம்ப ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்த நடவடிக்கைகளும் ஊர்க்காரர்களை அப்படி நம்பச் செய்தும் விட்டது. நிஜமாகவே ஆவிதான் நுழைந்ததா, நமது ஹீரோ ஊரை ஏமாற்றினாரா என்பதையெல்லாம், நொடிக்கு நொடி டார்க் காமெடி வெடியுடன், சமூகத்திற்கு தேவையான கருத்துடனும் காட்டி முடித்துள்ளது இந்த "சு ப்ரம் சோ" படம்.

review movie kannada

காமெடியுடன் சமூக கருத்துக்கள்

ஸ்பாயிலராக இருந்தாலும், இந்த படத்தின் பெயர் ஏன் இப்படி உள்ளது என்பதை சொல்லிவிடுகிறோம். சுலோச்சனா ப்ரம் சோமேஸ்வரா என்பதன் சுருக்கம்தான் "Su From So". படத்தின் ஊடே, போலிச் சாமியார்கள், மூட நம்பிக்கை, பெண்களுக்கு உறவுக்கார ஆண்களிடமே இருந்து ஏற்படும் பாலியல் சுரண்டல்கள் போன்றவற்றை இயல்பாக முன்வைத்ததில் ஜெயிக்கிறது படம். எந்த இடத்திலும் ஹீரோயிசமோ, வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளோ இன்றி, 30 விநாடிக்கு ஒருமுறையாவது டயலாக் அல்லது பாடிலேங்குவேஜ் வழியாக சிரிக்க வைத்தபடியே இருப்பேன் என்று சத்தியம் செய்துவிட்டு வந்து இயக்கியுள்ளார் தும்மிநாட். இதுதான் படத்தின் பிரமாண்ட சக்சசுக்கு காரணம்.

ஒரே ஏரியா, திரும்ப திரும்ப வரும் அதே முகங்கள், பிரமாண்டம் இல்லாமை, காதல் பாடல், அதிரடி சண்டை காட்சிகள் இல்லாதது, கவர்ச்சி இல்லாதது, குத்துப்பாட்டு இல்லாதது, படத்தின் கிளைமேக்ஸில்தான் ரசிகர்கள் விசில் அடிக்கும் ஒரு காட்சி இப்படி கமர்சியல் பார்முலாவிற்குள் அடைபடாத படம்தான், ஆனால் வசூலில் யாருமே எதிர்பார்க்காத புயலை கிளப்பியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் சக்சஸ்

மூன்று நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாத ஒரு சிறு பட்ஜெட் திரைப்படம், இன்று பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை நொறுக்கித் தள்ளியுள்ளது. 'சையாரா', 'F1', 'ஹரி ஹர வீர மல்லு' போன்ற பிரம்மாண்டப் படங்கள் ஓடிக் கொண்டிருந்த வேளையில், "Su From So" எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆனால் தன் தரத்தால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்து, 2025-ன் ஆச்சரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது!

review movie kannada

புக்கிங்கில் சாதனை

ஜூன் 26, சனிக்கிழமை அன்று, புக்மைஷோ (BookMyShow) டிக்கெட் ஆப் மூலம் 1 லட்சத்து 27 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வரலாறு படைத்துள்ளது "Su From So"! ஒரு கன்னடப் படத்திற்கு ஒரே நாளில் ஆன்லைன் தளத்தில் இவ்வளவு டிக்கெட் விற்பனையானது இதுவே முதல்முறை! ஞாயிற்றுக்கிழமை, இந்தியா முழுவதும் 550-க்கும் மேற்பட்ட ஹவுஸ்ஃபுல் ஷோக்களைக் கண்டது "Su From So". பெங்களூரில் மட்டும் ஞாயிற்றுக்கிழமை 72 அதிகாலைக் காட்சிகள் (அதாவது காலை 9 மணிக்கு முன்) புதிதாக சேர்க்கப்பட்டன. இது இதுவரை இல்லாத நிகழ்வு. இத்தனைக்கும் படத்திற்கு விளம்பரமே செய்யமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டுதான் ரிலீஸ் செய்தது படக்குழு. கேஜிஎப் மாதிரி படம் எடுத்த படக்குழுவே இந்த சிம்பிளான படம் எப்படி புயலை கிளப்பியுள்ளது என்று வியந்து பார்க்கிறது.

கன்னட திரையுலகின் இரட்டை பிளவு

ரங்கித்தரங்கா (2015) 'கிரிக் பார்ட்டி' (2016), 'காந்தாரா' (2022), மற்றும் '777 சார்லி' (2022) படங்களைப் போலவே, இந்த முறையும் கடலோர கர்நாடகப் பகுதியைச் சேர்ந்த சினிமா டீம்தான், கன்னடத் திரையுலகை மீண்டும் உலுக்கியுள்ளது. பெங்களூர் உட்பட பிற பகுதிகளைச் சேர்ந்த படைப்பாளிகள் இன்னும் பலமுறை அடித்து துவைத்த கமர்சியல் பார்முலாவையே, அதிகம் நம்பிக்கொண்டுள்ள நிலையில், கடலோர பகுதி படைப்பாளிகள் வித்தியாசமாக முயன்று அதில் வெற்றிகளையும் பெற்று வருகிறார்கள். அதன் லேட்டஸ்ட் உதாரணம்தான் "Su From So".

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+