நல்லவேளை, ராஷ்மிகாவுக்காக ஓடோடி வந்த பழங்குடியினர்.. நடிகையை சுற்றி பின்னப்பட்ட தந்திர வலை: பிரபலம்
சென்னை: தன்னுடைய சினிமா வாழ்க்கையை கர்நாடகாவில் தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை ராஷ்மிகா புறக்கணித்துவிட்டதால், தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கன்னட ஆர்வலர் டி.ஏ.நாராயண கவுடா ராஷ்மிகாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இதையடுத்து, கொடவா பழங்குடியினத்தை சேர்ந்த ராஷ்மிகாவிற்கு பாதுகாப்பை கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வலைப்பேச்சு அந்தணன் இதுகுறித்து கருத்து கூறியிருக்கிறார்.
AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன்.. அதில், "நடிகை ராஷ்மிகாவுக்கு எதிராக கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏவே கண்டன கருத்துக்களை சொல்லி வருகிறார்.. அதுதான் பெரிய அதிர்ச்சியாக உள்ளது.. அரசியல்வாதிகள், ஒரு நடிகையை ஏன் திட்டமிட்டு இவ்வாறு சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

ராஷ்மிகா என்ன பேசினார்
சினிமா என்ற துறைக்குள் அரசியல் நுழைந்துள்ளது.. கர்நாடகாவை பொறுத்தவரை மொழிப்பற்று அதிகம்.. தங்களுடைய மொழியின் மீதும், இனத்தின்மீதும் ஒட்டுமொத்தமாக முடிச்சு போட்டு பேசும்போது, ராஷ்மிகாவுக்கு எதிராக திரள்வதாக கூறுகிறார்கள்.
"கர்நாடகாவா? பெங்களூரா? அது எங்கே இருக்கு" என்று ராஷ்மிகா கேட்டதாக, காங்கிரஸ் எம்எல்ஏ குற்றஞ்சாட்டுகிறார்.. கர்நாடகாவில்தான், ராஷ்மிகா பிறந்து, வளர்ந்து, படித்திருக்கிறார்.. அப்படியிருக்கும்போது, சொந்த மாநிலத்தை எப்படி குறை சொல்வார்? தெலுங்கு போலவே கர்நாடகாவிலும் இன்று பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா.
கசப்பான சம்பவங்கள்
ஒருவேளை தான் திருமணம் செய்து கொள்ள போகுமிடம் ஆந்திரா என்பதால், ஒருவேளை பெங்களூர் நிகழ்ச்சிகளை ராஷ்மிகா புறக்கணித்திருக்கலாம் அல்லது கசப்பான விஷயங்கள் ஏதாவது ராஷ்மிகாவுக்கு கர்நாடகாவில் நடந்திருக்கலாம். ஒரு இடத்தை பிடிக்காமல் போல பல காரணங்கள் இருக்கலாம். "என்னுடைய ஊர்" என்று ஆந்திராவை உணர்ச்சிவசப்பட்டு சொல்லியதாக தெரிகிறது. இதைவைத்தே கர்நாடகாவில் ராஷ்மிராவுக்கு எதிரான அலையை உருவாக்க நினைக்கிறார்கள்.
தேவையில்லாத மன உளைச்சல்
ராஷ்மிகா பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த இனத்தை சார்ந்தவர்கள், ராஷ்மிகாவுக்கு சப்போர்ட்டாக களமிறங்கியிருக்கிறார்கள். ஏதோ தனிப்பட்ட கருத்து அல்லது மோதல் இருக்கவே செய்கிறது.. அதுக்காக, சாதாரண பிரச்சனையை மாநில பிரச்சனையாக மாற்றி கொண்டிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
நாளைக்கு கர்நாடகாவில் ராஷ்மிகா படம் வெளியானால் அதை தடை செய்ய முடியாது.. ஒன்றிரண்டு நாள் தடுத்தாலும், அதை தொடர முடியாது. ஆனால் தேவையில்லாமல் மனஉளைச்சலை ராஷ்மிகாவுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications