பிரபு இப்படியா சொன்னார்? பாத்ரூமிலிருந்து லுங்கியை பிடித்தபடி வந்த வடிவேலு.. அது வேற லெவல்: பிரபலம்
சென்னை: காமெடி டிராக் ராஜகோபால் என்றால், கவுண்டமணி-செந்தில் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் காமெடி வசனங்கள் எழுதியவர்.. சாய் ராஜகோபால் என்பது இவரது பெயர்.. இவர் ஒரு திரைப்பட ரைட்டர், இயக்குனர் மற்றும் நடிகரும் ஆவார்.. மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் தான் எழுதிய காமெடி சீன்கள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், விவேக், வடிவேலு இருவரின் நடிப்பு திறமை குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார்.
Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள 'மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் விவேக், வடிவேலு இருவருமே நன்றாக நடித்திருந்தார்கள்.. நான் கவுண்டமணியின் காமெடி ரைட்டர் என்பது இருவருக்குமே தெரியும்.. மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவுக்கு டயலாக் சொல்லி கொடுத்து கொண்டிருந்தால், விவேக் ஒருமாதிரியாக பார்த்து சிரித்து கொண்டே போவார்..

மிடில் கிளாஸ் மாதவன்
உடனே வடிவேலு, விவேக்குக்கு போய் டயலாக் சொல்லி கொடு, ஏதாவது தப்பா எடுத்துக்க போறான் என்பார். நானும் விவேக்குக்கு டயலாக் சொல்லி தர போனால், சும்மா விளையாட்டுக்குதான் கிண்டல் செய்தேன் என்பார்.. அந்தவகையில் மிகவும் டீசன்ட் நபர் விவேக்..
விவேக், வடிவேலு இருவரும் நேரில் பார்த்து கொண்டால், வாடா, போடா என்றுதான் பேசிக் கொள்வார்கள்.. அவர்களுக்குள் தொழில் போட்டி இருக்கும். ஆனால் நான் இருவருக்கும் பொதுவான டயலாக்குகளைதான் எழுதுவேன். பாடிலேங்குவேஜில் வடிவேலு காமெடியை வேறு மாதிரி கொண்டு சென்றுவிடுவார் .
வடிவேலு லுங்கி சீன் - பிரபு எதிர்ப்பு
பாத்ரூமிலிருந்து கைலியை தூக்கி கொண்டு, வடிவேலு வெளியே வருவது போல சீனையெல்லாம், வடிவேலு தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. பிரபு என்னை எப்போதும் ஆசிரியரே என்றுதான் கூப்பிடுவார்.. வடிவேலு லுங்கியை தூக்கி கொண்டு பாத்ரூமிலிருந்து வருவதை பார்த்த பிரபு என்னிடம், என்ன ஆசிரியரே, குடும்பத்தோடு மக்கள் இந்த படத்தை பார்க்க வேண்டாமா? ஆபாசமா இருக்கே? என்றார்.
இந்த சீனை பார்த்தால் குடும்பத்தோடு விழுந்து விழுந்து சிரிப்பார்கள் சார் என்றேன். ஆனாலும் பிரபு சார் அதை கேட்கவில்லை.. உடனே கஜூ என்று டி.பி. கஜேந்திரனை கூப்பிட்டு, இந்த சீன் வேணாம் சார், வேற மாதிரி எடுங்க என்றார்.. டி.பி.கஜேந்திரன் சாரும் பிரபு சொன்னதை ஒப்புக் கொள்ளல. இந்த சீன் ரொம்ப நல்லா இருக்கும் என்று பிரபுவை கன்வின்ஸ் செய்தார்.
எண்ணெய்யில் வழுக்கி விழுந்த விவேக்
அதேபோல, உடம்பில் வெந்நீர் ஊற்றி வெந்துபோய் படுக்கையில் விழுந்து கிடப்பார் வடிவேலு.. இதுபோல விவேக்கும் அடிபட்டு கீழே விழுவது போல சீன் வைக்க வேண்டும் என்று வடிவேலு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு பிறகுதான், தரையில் எண்ணெய் ஊற்றி அதில் விவேக் வழுக்கி விழும் சீனை எடுத்தோம். ஸ்பாட்டில் எடுத்த சீன் என்பதால், விவேக்குக்கு, ஸ்டண்ட் நபர் ஒருவரை டூப் போட்டு, எண்ணெய்யில் வழுக்கி பீரோவில் முட்டிக் கொள்வது போல எடுத்தோம்.
வடிவேலுவின் மாமியார் கேரக்டராக நடித்த ரேவதி அம்மாள், ஷூட்டிங் பிரேக்கில் ஏதாவது பழைய பாட்டு பாடிக் கொண்டேயிருப்பாங்க. அதனால்தான் அந்த கேரக்டரையே படத்தில் பாடிக் கொண்டேயிருப்பது போல வைத்துவிட்டோம். குத்தால அருவியிலே குளிச்சது போல இருக்குதா என்று அந்தம்மா பாடும்போது, "மாலா, இங்கே பொரிஞ்சிட்டு இருக்கு, உங்கம்மாவுக்கு பாட்டு கேட்குதா?" என்று வடிவேலு கேட்டதுமே எல்லாருமே சிரித்துவிட்டோம்.
மகாலட்சுமி - கெட்ட வார்த்தை
மதுரையில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு குடிகாரர், காலையில் தன்னுடைய அம்மாவிடம் "மகாலட்சுமி, உன் முகத்தை காட்டு" என்று சொல்லிவிட்டுதான், ஆட்டோவில் கிளம்பி போவார்.. சாயங்காலம் திரும்பி வந்து அம்மாவை கெட்ட வார்த்தையில் திட்டுவார்.. அதற்கு அந்தம்மா, "காலையில்தானே என்னை மகாலட்சுமின்னு சொன்னே?" என்று கேட்பார். அந்தம்மாவும் நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருப்பார்.. இதைதான் இந்த படத்திலும் சீனாக வைத்தேன் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications