வாரிசு நடிகரின் கேவலம்.. டிசைன் டிசைன் ஜாக்கெட்டில் மனைவி! அம்பானி வீட்டில் டான்ஸ்: தயாரிப்பாளர் வலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்களை, எந்த நடிகர்களும் கண்டுகொள்வதில்லை, அதனால் தங்களது அபிமான நடிகர்களுக்காக வருத்தி கொள்ளாமல், அவரவர் குடும்பங்களை ரசிகர்கள் பார்க்க வேண்டும், ரசிகர்கள்தான் திருந்தவேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பிறந்தநாளுக்கு கடன் வாங்கி பிளக்ஸ் பேனர்களை வைத்து, அதன்மூலம் கடனாகி, அந்த ரசிகர் தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்றிருக்கும் ரசிகர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று AramNaadu யூடியூப் சேனலில் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பாலாஜி பிரபு மன வேதனையுடன் பேசியதுடன், தயாரிப்பாளர்களின் வலியையும் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம்தான் இவை:

successor actors ambani


அபிமான நடிகர்கள்: "முதலில், ரசிகர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். தங்களது அபிமான நடிகர்களால் இவர்களுக்கு எந்தவிதத்திலும் பலன் கிடைக்கப்போவதில்லை.. அன்பு, பாசம் கிடைக்க போவதில்லை.. பல நடிகர்கள் போடுவதெல்லாம் வேஷம்தான்.

தங்களை சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருக்க வேண்டும், தலைவா தலைவா என்று கத்திக்கொண்டே தங்களை சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால், இதில், கண்டிக்கப்பட வேண்டியவர்கள் ரசிகர்கள்தான். "அவங்கவங்க வீட்டை பாருங்க, தங்களது குடும்பத்தையும், தங்களது லட்சியத்தையும் நோக்கி ஓடுங்க" என்று அஜித் சொல்வதுடன், அதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படியொரு மனப்பக்குவம் பல நடிகர்களிடம் இல்லை.

தயாரிப்பாளர்கள்:
ஒருகாலத்தில் தயாரிப்பாளர்களை சுற்றி சுற்றி வந்த நடிகர்கள், வாய்ப்பு கிடைத்து பிரபலமானதுமே, அதே தயாரிப்பாளர்கள் உதவி கேட்டு போனால், தங்கள் வீட்டு நாய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.. நாயை பார்த்ததுமே, உதவி கேட்க சென்ற தயாரிப்பாளர்கள் வந்த ஆட்டோவிலேயே திரும்பி விடுகிறார்கள்..

எந்த வாரிசு நடிகர்கள் தங்களது சொந்த தயாரிப்பில் நடிக்கிறார்கள்? ஆரம்ப காலத்தில் எஸ்ஏசி தன்னுடைய மகன் விஜய்யை வைத்து 4 படம் எடுத்தார்.. அதை பாராட்டலாம். சூர்யா வாரிசு நடிகர்தானே? வெளியில் மணிரத்னம் பேனரில்தானே நேருக்கு நேர் நடித்தார்? கவுதம் கார்த்தியும் மணிரத்னம் பேனர்தானே? முரளி மகன் அதர்வாவும் சத்யஜோதி பிலிம்ஸில்தானே நடிச்சாரு? பிரபு மகன் கும்கியிலும் வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்துதானே நடித்தார்?

வாரிசு நடிகர்கள்:
வாரிசு நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளையே அறிமுகப்படுத்துவதில்லையே? விக்ரம் மகனும், வேறொரு தெலுங்கு தயாரிப்பாளரிடம்தானே அறிமுகமானார்? ஏன் இவங்க கிட்ட எல்லாம் கோடிகள் இல்லையா? ஆரம்பத்தில் இப்படி தேடிதேடி போன தயாரிப்பாளர்களை சில வாரிசுகள் கண்டுக்கறதே இல்லை.

தயாரிப்பாளர் வீட்டுக்கு விருந்துக்கு நீங்க போகவேண்டாம், தயாரிப்பாளர் வீட்டு கல்யாணத்துக்கு நீங்க போக வேண்டாம்? ஆனால், தான் அறிமுகப்படுத்தின நடிகருக்கு, கல்யாண பத்திரிகை தரணும்னு நினைச்சு தயாரிப்பாளர்கள் போறாங்க.. ஆனால், அந்த வீட்டின் கதவை கூட திறக்கறது இல்லை. அவங்க வீட்டு விசேஷத்துக்குகூட போக வேணாம்.. ஆனால், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் இறந்துட்டால், எத்தனை நடிகர்கள்போய் அங்கே நிற்கிறார்கள்? யாருமே நிற்பதில்லை என்பதே உண்மை..

அம்பானி வீடு: ஆனால், அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு அழைப்பு என்றால், டிசைன் டிசைனா ஜாக்கெட்டை போட்டு, மனைவியை கூட்டிட்டு போறாங்க.. இவங்களுக்கும், அம்பானி வீட்டுக்கும் என்ன தொடர்பு? 2 கோடிக்கு வாட்ச் கிப்ட் தந்துட்டு வர்றாங்க.. 200 கோடி சம்பளம் வாங்கிட்டு, கிஃப்ட் தந்துட்டு, அங்கே டான்ஸ் வேற ஆடிட்டு வர்றாங்க..

உங்களை அறிமுகப்படுத்திய அல்லது வெற்றி படங்களை உங்களுக்கு தந்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் வீட்டு கல்யாணத்துக்கு போய் இதுவரை டான்ஸ் ஆடியிருக்கீங்களா? அம்பானி வீட்டுல போய் மாஸ் காட்ட தெரியுது, இங்கே கோயம்பேட்டுல ஒண்டுகுடித்தனத்துல இருக்கிற தயாரிப்பாளர் வீட்டுபக்கம்கூட எட்டிப்பார்க்கிறது இல்லை. இவங்களை எல்லாம் எந்த லிஸ்ட்டில் வைக்கிறது?

அனுதாபம்:
இதோ இப்போ ரஜினியின் ரசிகர் இறந்துபோயிட்டாரு.. இவருக்கு ரஜினி தன்னுடைய அனுதாபத்தை தெரிவிப்பார்ன்னு நினைக்கிறீங்களா? யாரும் யாரை பத்தியும் கவலைப்படாமல், தங்களுடைய வாழ்க்கை மட்டும் சொகுசா வாழனும்னு நினைக்கிறாங்க..
நடிகர்களை வைத்து கோடிகளை போட்டு பணம் எடுக்கும், தயாப்பாளர்கள் பலரை தெருக்கோடியில் கொண்டுபோய் நிறுத்தி விடுகிறார்கள்.

தனக்கு பிடித்த நடிகரை மேடையில் பார்த்ததுமே, தீவிர ரசிகர் ஒருவர், கூட்டத்தை முண்டியடித்து கொண்டு, மேடையேறுகிறார்.. ஆனால், அந்த நடிகரின் பவுன்சர்கள், அந்த ரசிகரை குத்து குத்துன்னு அடிச்சி கீழே இறக்கிட்டாங்க.. அன்பும்,பாசமும், ஆசையுடனும் ஓடிவரும் அந்த ரசிகனை பக்கத்தில் அழைத்து ஒரு செல்பி எடுத்துட்டு, சந்தோஷப்படுத்தி அனுப்பலாம் இல்லை? அவன் என்ன கத்தியிலயா உங்களை குத்திட போறான்? இந்த சின்ன பண்பு கூட இல்லாத சின்னப் புத்திக்காரர்கள்" என்றெல்லாம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+