விஷ்ணு, தினேஷ் சண்டையில் தனுஷை வம்பு இழுத்த சுசித்ரா.. அந்த வார்த்தைக்கு அப்படி ஒரு அர்த்தமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் மற்றும் விஷ்ணு இருவரும் டாஸ்க் நேரத்தில் போட்ட சண்டைக்கு பாடகி சுசித்ரா தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு தினேஷ் தனக்கு கொடுக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க் காரணமாக விஷ்ணுவிடம் சண்டை போட்டு இருந்தார். அப்போது விஷ்ணுவை அமுல் பேபி என்று தினேஷ் அழைத்ததால் விஷ்ணு கோபமாகி இருந்தார்.

இந்த நிலையில் அமுல் பேபி என்ற வார்த்தைக்கு தனுஷ் கேங்கில் வேறு விதமான அர்த்தம் இருக்கிறது. அதனால் தான் விஷ்ணு கோபப்பட்டார் என்று சுசித்ரா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக திகழ்ந்துவரும் சுசித்ரா பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர்.

அதை தொடர்ந்து சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத், சஞ்சித் ரெட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் வெளியாக்கி சுசித்ரா பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அதை குறித்து பலரும் விமர்சித்திருந்த நிலையில் தன் தரப்பு நியாயத்தையும் சுசித்ரா கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் சுசித்ராவால் நீடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து சில ஆண்டுகளாக அவர் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போது சுசித்ரா தன்னுடைய ஆதரவை பிரதீப்க்கு கொடுத்து பேட்டிகளில் பேச தொடங்கி இருந்தார். அதைத் தொடர்ந்து மாயாவும் அவருடைய கேங்கும் தான் பிரதீப் உடைய வெளிச்சத்திற்கு காரணம் என்று சுசித்ரா கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மாயாவை பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் அவர் ஒரு லெஸ்பியன் என்றெல்லாம் பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து மாயாவின் குடும்பத்தினர் போலீசில் சுசித்ரா மீது புகார் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இப்படியான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு மற்றும் தினேஷ் இடையே நடந்திருக்கும் கடுமையான மோதல்தான் இப்போது மீண்டும் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அதில் தினேஷை விஷ்ணு நரி என்று சொல்ல அதற்கு விஷ்ணுவை தினேஷ் அமுல் பேபி என்று சொல்லி இருப்பார்.

இதனால் விஷ்ணுவுக்கு கோபம் வந்து அங்கிருந்த சேரை எட்டி உதைத்து இந்த மிதி உனக்கு தான் என்று கூறி இருப்பார்.இப்படி விஷ்ணு தன்னை அமுல் பேபி என்று தினேஷ் கூப்பிட்டதும் எதற்காக கோபப்படனும்? இது ஒன்றும் பெரிய கெட்ட வார்த்தை இல்லையே? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டிருந்தார்கள்.
இந்த நிலையில் இது குறித்து சுசித்ரா தனுஷ் மற்றும் அவருடைய கேங் தான் அமுல் பேபி என்ற வார்த்தைக்கு தனி அர்த்தம் ஒன்றை வைத்து இருக்கிறார்கள். வெள்ளை நிறத்தில் பம் ஆக இருப்பவர்களை தான் அமுல் பேபி என்று தனுஷ் கேங் அழைக்கும். இது விஷ்ணுவுக்கு தெரியும். அதனால்தான் விஷ்ணு அப்படி தன்னை தினேஷ் கூப்பிட்டதும் கோபப்பட்டார் என்று சுசித்ரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications