Sudari Neeyum Sudaran Naanum serial: புரட்டாசி படையல் சீரியலிலும் சூப்பர்!
சென்னை: உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் புரட்டாசி சனி விரதம் படையல் என்று தூள் கிளப்பி வருகிறார்கள்.
வாழை இலை என்ன... வடை பாயசம் என்ன...விதம் விதமான கலந்த சாதம் என்ன என்று அமர்க்கள படுகிறது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்று திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று சிறப்பு ஆராதனைகள், அலங்கரங்கள் என்று விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் படையல் போட வேண்டும் என்றும், வீட்டில் உள்ள அனைவரும் இந்த பூஜை வேலைகளை சேர்ந்து செய்து, படையல்போட வேண்டும் என்றும் பாட்டி ஆசைப்படறாங்க. இதுக்கு தனது தோழி என்று கூறிக் கொள்ளும் தமிழ்ச் செல்வியை துணைக்கு அழைச்சுக்கறாங்க.

வேலு தமிழ்ச்செல்வி
தமிழ்ச் செல்வியை தனது பேரன் வேலுவுக்கு எப்படியாவது கட்டி வைத்து விட வேண்டும் என்று, இருவரையும் சேர்ந்து சேர்ந்து வேலை பார்க்க சொல்கிறார்கள். ஆனாலும் இருவரும் எலியம் பூனையும் போல இருக்க படையல் போட வடை சுடும்போது தமிழ்ச்செல்வி கையில் எண்ணெய் சுட்டு விடுகிறது.

உதவி தமிழுக்கு
பாட்டி தமிழ்தான் படையல் போட வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட, பாட்டிக்காக என்று வேலுவும் கையில் சூடு பட்ட தமிழ்ச் செல்விக்கு உதவி செய்யறான்.சேர்ந்து சாம்பிராணி போடுவது, தீபாராதனை காட்டுவது என்று.

தமிழும் வேலுவும்
தமிழ்ச்செல்வியும் வேலுவும் சாப்பிட உட்கார. வேலுவின் சித்தி, படையல் போட்டவங்கதான் சாப்பாடு போட்டு மடிப் பிச்சை வாங்கி காக்காய்க்கு வைக்கணும்னு சொல்றாங்க. இதுக்கும் வேலு உதவி செய்ய இருவருக்குள்ளும் ஒரு கெமிஸ்ட்ரி பாட்டி எதிர்பார்த்த மாதிரி வொர்கவுட் ஆகுது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications