தூக்கி கட்டிய கொண்டையோடு... பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் கலக்கும் அண்ணி!
சென்னை: இதுவரைக்கும் புடவையில் தரிசனத்தை தந்த சுஜிதாவா இது என ரசிகர்கள் குழப்பும் வகையில் ஜீன்ஸ் மாடல் உடையில் கலக்கலாக குத்த வைத்தபடி பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் இளம் நடிகைகளை ஓரம் கட்டிய வகையில் வெளியிட்டிருக்கும் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் முக்கியமானதாக பல குடும்பப் பெண்களின் மனதில் இடத்தை பிடித்திருக்கும் குடும்ப சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர் .
இந்த சீரியலில் ஒரு குடும்பத்தை கட்டிக்காக்கும் குடும்பத் தலைவியாக அந்த வீட்டின் அண்ணியின் கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் சுஜிதா தற்போது இந்த சீரியல் ரசிகர்களின் மனதில் தனம் அண்ணியாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மூத்த மருமகள்
பிரைவஸி எதிர்ப்பார்க்கும் மருமகள்களின் பிடிக்காத வராக இருந்தாலும் வீட்டு மாமியாருக்கு பிடித்த மருமகளாக இவர் இருந்து வருகிறார் .தற்போது இந்த சீரியலில் குடும்ப ஒற்றுமைக்கு இவரே காரணமாக முழுக்க முழுக்க இவரை சுற்றியே இந்த சீரியல் வலம் வந்து கொண்டிருந்தாலும் சீரியல் முழுக்க இவரை புடவையில் பார்த்த ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்ததும் ஸ்வீட் ஷாக் ஆகி இருக்கிறார்கள் .

கலக்கல் போஸ்
இவருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இதுவரை இல்லாத வகையில் தற்போது இவர் மாடல் உடையில் கலக்கலாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். ஏற்கனவே இந்த போட்டோஷூட் மோகம் நாளுக்கு நாள் நடிகைகளின் மனதில் ஆட்டிப்படைத்து வருகிறது. அது தற்போது இவரையும் விட்டுவைக்கவில்லை .இவர் ஏற்கனவே சீரியல்நடிகை மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் ஒரு மாடலாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அசத்தல் போட்டோஷூட்
அந்த மாதிரி தான் தற்போது இவர் மாடலிங் போட்டோக்களையும் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் .அவருடைய போட்டோவை பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என கேட்டிருக்கிறார்கள் .ஆனால் அதற்கு அவருடைய ரசிகர்களே அவர் மாடல் உடையில் இருந்தாலும் கண்ணியமாக தானே இருக்கிறார் .

என்ன குறைச்சல்
அவருக்கு என்ன என அவருக்கு சப்போர்ட்டும் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சீரியலில் இந்த வீட்டு மூத்த மருமகள் ஆக வயதானவராக காட்டியதால் அவர் அப்படி ஒன்றும் வயதானவராக ஆகிவிடவில்லை இன்னமும் அதே அழகோட தான் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என அவருடைய ரசிகர்களும் அவருக்கு சப்போர்ட் பண்ணி வருகிறார்கள் . ஆனாலும் இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது இவரை இந்த மாதிரி மாடல் உடையில் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சியான ரசிகர்கள் கூட கமெண்ட்களையும் லைக்களையும் குவித்து வருகின்றனர்.

கலக்கல் நாயகி
இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாக்களில் அறிமுகமாகி தற்போது வரையும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இவருக்கு சீரியல்கள் மூலம் தான் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக இருக்கிறார் .கங்கா யமுனா சரஸ்வதி சீரியலில் தொடங்கி இப்ப வரைக்கும் பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகால் பல பெண்களையும் வசீகரித்து வைத்திருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications