சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.. ஜில்லுன்னு கலக்கும் தனம்!
சென்னை: எல்லா சீரியல் நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சியில் இணையதளத்தை கதற விட்டுக் கொண்டிருக்கும் போது சுஜிதா மட்டும் தனி வழியில் போய்க் கொண்டிருக்கிறார்.
சிக்கென்ற எடையில் நடிகைகள் ரணகளம் செய்து வரும்போது, என்னுடைய வழி தனி வழி, ஹோம்லியாகவும் கலக்க முடியும் என்று இன்ஸ்டாகிராமில் புடவைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்னுடைய சாந்தமான சிரிப்பால் கவர்ந்து இழுக்கிறார்.
சுஜிதா போடும் இந்த சேலை போட்டோஸ் செம வைரலாகியுள்ளது. சேலையில் பார்க்கவே அம்சமாக தேவதை போல ஜில்லென்று இருக்கிறார் தனம் என்ற பெயரால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுஜிதா.

குழந்தை நட்சத்திரம்
குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமாகி இன்று வரையிலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அழகான கதாநாயகி தான் சுஜிதா. இவருக்கு இவருடைய பையனும் கணவரும் பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறார்களாம். தென்னிந்திய மொழிகளிலும் இந்தி மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து இருக்கிறார்.

சொந்த ஊர் கேரளா
அது மட்டுமல்லாமல் பல விளம்பரப் படங்களிலும் சாமி வீடியோகளிலும் நடித்திருக்கிறார். இவர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் என்பது பலருக்கும் தெரியும் .அது போல விளம்பர திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஒரு அழகான மகனும் இருக்கிறார். இவர் சீரியல்களில் மிகவும் பவ்வியமாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவருடைய குழந்தை வளர்ப்பதிலும் மிகவும் கவனமாக இருக்கிறாராம்.

நல்ல தாய்
அவருடைய குழந்தைக்கு மட்டுமல்லாமல் இந்த நேரத்தில் பல குழந்தைகளுக்கும் கதைசொல்லி நல்லறிவை புகுத்தியும் வருகிறார் .இவர் ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி அதில் கதை கேளு கதை கேளு என்று இவரது மகனும் இவரும் சேர்ந்து கதைகளை சொல்லி வருகிறார்கள். இதைப் பார்த்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் இவர்களுக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள். இவர் சீரியல்களிலும் பல திரைப்படங்களிலும் நடித்து இருந்தாலும் இவருக்கு மனநிறைவு தருவது எல்லாமே தன்னுடைய மகனுடன் கொஞ்சி விளையாடுவதில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பெற்றோர்களுக்கு நல்லறிவு
அது போல பல பெற்றோர்களுக்கும் இவர் அறிவுரையும் கூறி இருக்கிறார் .வீட்டில் குழந்தையோடு இருக்கும் போது அதிகமாக போன் யூஸ் பண்ணாதீர்கள். அதுவும் குழந்தை தூங்கும் நேரத்தில் அந்த இருபது நிமிடம் போலதான் இருக்கும் அந்த நேரத்திலும் நீங்கள் தயவு செய்து போன் யூஸ் பண்ணாமல் குழந்தையுடன் நேரத்தை செலவிட்டால் குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லதாக இருக்கும் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் வீட்டில் அப்படி தான் செய்து கொண்டிருக்கிறார்.

தனம் அண்ணி
தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல் தனமாக நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிக்கொண்டே இருக்கிறது .இதற்கு முன்னாடி அவர் எத்தனை சீரியல்களிலும் படங்களிலும் நடித்து இருந்தாலும் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டு இந்த சீரியலில் ரசிகர்கள் இவரை தனம் என்று தான் கூப்பிடுவார்கள் .அந்த அளவிற்கு வீட்டின் மூத்த மருமகளாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்துக் கொண்டார் அந்த சீரியலில் இவருடைய கேரக்டர் பாசக்கார மூத்த மருமகளாக இருப்பதால் ரசிகர்கள் இவரை அப்படியேதான் பார்க்கிறார்களாம்.

இவ்வளவு வெகுளியா இருக்கீங்களே
சில ரசிகர்கள் இவரை வெளியில் பார்க்கும் போது கூட ஏன் இவ்வளவு வெகுளியாக இருக்கிறீர்கள் உங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமா என்றெல்லாம் இவருக்காக அனுதாப படுகிறார்களாம். அதை பார்க்கும் போது இவருக்கு சிரிப்பு தான் வருகிறது .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது பெரும் பரபரப்பும் வதந்திகளும் பரவி வருகிறது. இதில் இவரை வைத்தும் இதில் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

சித்து கிளப்பிய புரூடா
சூட்டிங் இல்லாத நேரத்தில் தனம் தனது நெக்லஸை கடனாகக் கேட்டார். கொடுத்தேன் இன்னமும் திருப்பி தரவில்லை . அது மட்டுமல்லாமல் நான் போட்ட கோலத்தை அவர் போட்டதாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டு விட்டார். அதனால் நான் ரொம்பவும் மன உளைச்சலாக இருக்கிறேன் எனது நெக்லஸ் திருப்பி தருவது பற்றி இண்ணமும் அவர் வாய் திறக்கவில்லை இதைப் பற்றி என்ன சொல்வார் அவர் என்று ஒரு நியூஸ் வாசிப்பாளர் போல கேள்வி கேட்டு ஒரு வீடியோவை போட்டு இருந்தார்.

ஜாலியாக எடுத்த வீடியோ
இந்த வீடியோ பெரும் வைரலாக பரவி வந்தது.ஆனால் அது ஒரு ஜாலியாக எடுத்த வீடியோ தான் என்று பலருக்கும் தெரியும். இந்த கலாயை பலரும் ஜாலியாக ரசித்தார்கள். இவருக்கு எப்பவுமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் .அதுபோல இணையதளங்களிலும் இவரை புகழ்ந்து தள்ளும் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள் .இவர் விதவிதமாக சேலை கட்டிக்கொண்டு ஹோம்லியாக படு பவ்வியமாக சிரித்த முகமாக போடும் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. கேலண்டர் பட ஹீரோயின் போல எப்போதும் அழகாக இருக்கிறீர்களே என்றெல்லாம் இவரைப் புகழ்ந்து வருகிறார்கள்.
-
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள்












Click it and Unblock the Notifications