Sun Singer Programme: நிகழ்ச்சிக்கு இடையில் நகைச்சுவை.. இதென்ன டிரண்ட்?
சென்னை: சன் டிவியின் சன் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்சசிக்கு பாடகர்கள் தேர்வு முடிந்து, நிகழ்ச்சியைத் துவக்கி உள்ளார்கள். துவக்கமே வித்தியாசமாக அதே சமயம் நன்றாகவும் இருந்தது.
எப்போதுமே சன் சிங்கர் நிகழ்சசி ஒரு தேர்வு ஹால் மாதிரிதான் இருக்கும். போட்டியாளர்கள் பாடி முடித்ததும் நன்றாக இருக்கிறது, இல்லை என்கிற நடுவர்களின் கமென்ட்ஸ் இருக்கும். அனைவருக்கும் ஃபோகஸ் முழுவதும் பாடலில்தான் இருக்கும்.
இந்த முறை சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆதவனையும் சேர்த்திருக்கிறார்கள். நிகழ்சசிக்கு இடையில் அவ்வப்போது காமெடி செய்ய ஆதவனை புதிதாக சேர்த்திருக்கிறார்கள். ஆதவன் நன்றாக பாடக்கூடியவர் என்பது நிகழ்ச்சிக்கு பிளஸ்.

இது ஒரு டிரண்ட்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்காவை வைத்து காமெடி செய்து வருகிறார்கள். பிரியங்காவை மூக்குத்தி முத்து என்பவர் ஒன்சைடாக காதலிப்பது போலவும், பிரியங்கா செந்தில், ராஜலட்சுமி ஜோடியில், செந்திலை விரும்புவது போலவும், ராஜலட்சுமி தன் புருஷனை காப்பாத்தி கொள்வது போலவும் தொடர்ந்து காமெடி செய்து வருகிறார்கள்.

சன் டிவி சன் சிங்கர்
சன் டிவியின் சன் சிங்கருக்கான ஆடிஷன் நடக்கும்போதே இந்த நிகழ்ச்சியிலும் காமெடியை புகுத்த சன் டிவி நினைத்தது போலும்..அந்தந்த ஊரிலும் போட்டியாளர் போல வந்து, ஆதவன் பாடலும் பாடினார் காமெடியும் செய்தார். இது முகம் சுளிக்காமல் ரசிக்கும்படிதான் இருந்தது. விஜய் டிவியின் யுக்தியை கையாண்டு இருந்தாலும், இது சுவைபட இருக்கிறது.

மேடை பிரமாண்டமாக
சன் சிங்கர் மேடையே பிரமாண்டமாக இருந்தது.நாற்பது போட்டியாளர்களும் குரூப் சாங்ஸ் பாடி அசத்தினார்கள். அறுபதுகளின் சூப்பர் ஹிட் பாடல்கள், எண்பதுகளின் சூப்பர் ஹிட் பாடல்கள், அண்மைய கால ஹிட் பாடல்கள் என்று குரூப் குரூப்பாக பாடினார்கள்.ஆரம்பம் இது ரசிக்கும்படி இருந்தது.

ஆதவன் இடையில்
இடையில் ஆதவன் பாடகர்களின் தனித் திறமையை கண்டறிந்து அவைகளை மேடையில் சொன்னதும், ஸ்வரம், ராகம் பற்றி தனக்குத் தெரிந்த பாணியில் நகைச்சுவையாக பேசியதும் கூட சிரிக்கும்படி இருந்தது.நிகழ்ச்சியை ஒரு பரீட்சை ஹால் மாதிரி இறுக்கமாக கொண்டு போவதைத் தவிர்க்க சன் சிங்கர் இந்த டிரன்டை கையில் எடுத்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications