எப்போ பார்த்தாலும் அழுகையா... ரொமான்ஸ் பண்ண மாட்டீங்களா... சூப்பர் அம்மா!
சென்னை: சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சியின் ஃபினாலே களைகட்டியது. சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா தன் மனைவி சாயா சிங்குடன் வந்திருந்தார்.
ஹிப் ஆப் தமிழா, சின்ன பொண்ணு, அந்தோணி தாஸ், போன்றவர்கள் வந்திருந்தாங்க. குழந்தைகள் சிறப்பாக பாடினார்கள். கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் சிறப்பு விருந்தினர்கள்.
கவுதம் கார்த்திக், உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் தனது அப்பாவின் முத்திரை பாடலான ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே...உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே பாடலை மிக அழகாக இரண்டு வரிகள் பாடினார்.

நட்சத்திரா
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் திலீப், நட்சத்திரா இருவரும்தான். திலீப் நாயகி சீரியலில் நடிக்கிறார். நட்சத்திரா லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறார்.

சர்பிரைஸ்
நிகழ்ச்சியின் இடையில், நட்சத்திரா உங்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க ஒருத்தர் வரப்போறாங்க.. அவங்க யாருன்னு சத்தியமா எனக்கே தெரியாதுன்னு திலீப் சொன்னார். சிறிது நேரத்தில் கதவு திறக்க, லட்சுமி ஸ்டோர்ஸில் நட்சத்திராவுக்கு ஜோடியாக நடிக்கும் ரவி வந்திருந்தார்.

நல்ல ஆர்ட்டிஸ்ட்
ரவியின் நிஜ பெயர் உசேனாம். உசேன் ஒரு நல்ல கோ ஆர்டிஸ்ட்னு நட்சத்திரா புகழ்ந்தார். உங்க சீரியலில் உங்க ரெண்டு பேர் ரொமான்ஸ் அள்ளுதாமே.. ஊரெல்லாம் இதே பேச்சுன்னு திலீப் சொன்னார்.

ரொமான்ஸ்
இப்போ இங்கே ஒரு ரொமான்ஸ் பண்ணலாமேன்னு சொல்லி ஒரு பாடல் போட, இருவரும் செம ரொமான்டிக்காக டான்ஸ் ஆடினார்கள். டான்ஸுன்னு சொல்ல முடியாது, கையை பிடிப்பது, கட்டி பிடிப்பது, கண்களை நேருக்கு நேர் பார்த்து கொள்வதுன்னு கலக்கிட்டாங்க.

கிருஷ்
பாடகர் கிருஷ்.. யப்பா இவ்ளோ ரொமான்ஸா... நட்சத்திரா உங்க அம்மா இங்கே உட்கார்ந்திருக்காங்க உனக்கு தெரியுமா தெரியாதான்னு கேட்டார். எப்போ பார்த்தாலும் அழுதுகிட்டே இருப்பியா... ரொமான்ஸ் இருக்காதான்னு அம்மாவே கேட்பாங்கன்னு நட்சத்திரா சொல்ல, நல்லதொரு குடும்பம்.. பல்கலைக் கழகம்னு பாடல் பாடினர் கிருஷ்
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications