கொரோனா வந்தாச்சு.. சீரியல்கள் நின்னாச்சு.. சன் டிவியில் இனி சனி தோறும் "டபுள்ஸ்"!
சென்னை: சன் டிவியில் வருகிற சனிக்கிழமை முதல் சனி தோறும் சனி கிழமை டபுள்ஸ் என்று பேக் டு பேக் திரைப்படங்களை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது. கடந்த ஒரு வருடமாக ஞாயிறு டபுள்ஸ் என்று ஞாயிற்று கிழமைகளில் மட்டும்தான் இது போல் பேக் டு பேக் படங்களை ஒளிபரப்பி வந்தது.
சனி இரவு வழக்கம் போல சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சன் டிவி. முதன் முதலாக திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது.
கடந்த வருடம் கோடை விடுமுறை காலம் வந்தபோது கூட காலையில் ஒளிபரப்பப் படும் சீரியல்களை நிறுத்திவிட்டு, அந்த நேரத்தில் படங்களை தினமும் ஒன்று என்று ஒளிபரப்பி வந்தது.

கொரோனாவைரஸ்
பள்ளிகள் விடுமுறை...அலுவலகங்கள் விடுமுறை.. மார்க்கெட்.. சுற்றுலா தலங்கள் முதலியவை மூடல் என்று எந்தப் பக்கமும் மக்களை நகர விடாமல் செய்துள்ளது கொரோனாவைரஸ். இந்த நேரத்தில் மக்களின் ஒரே பொழுது போக்கு என்றால் அது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான்.

லாக் டவுன்
தொலைக்காட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகள் என்று வழமையானதை தொகுத்து வழங்க முடியாதபடி இப்போது ஷூட்டிங் நடத்துவதற்கும் தடை.. இப்படி எல்லாவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டு, கூட்டம் சேராதபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், வழக்கமாக ஒளிபரப்பப்படும் சீரியல்கள் கூட ஒளிபரப்ப முடியாத நிலையும் வரலாம்.

சனி டபுள்ஸ்
இதை கருத்தில் கொண்டு சன் டிவி இப்போதே சனிக்கிழமை ஒளிபரப்பும் சீரியல்களுக்கு விடுமுறை அளித்து, பதிலாக சனி டபுள்ஸ் என்று பேக் டு பேக் படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டு, அதன்படி படங்களை அறிவித்தும் உள்ளது. சனி டபுள்ஸ்.. ஞாயிறு டபுள்ஸ்..இதற்கு அடுத்து வெள்ளி டபுள்ஸ் வந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை.

வரும் சனி
வரும் சனிக்கிழமை அன்று சனி டபுள்சில் மாலை 6 மணிக்கு மொட்ட சிவா கெட்ட சிவா..இது முடிந்து 9:30 மணிக்கு ஹலோ நான் பேய் பேசுகிறேன் என்கிற இரண்டு படங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளன. திரைப்பட ரசிகர்களுக்கு இது நல்ல விருந்து. திரைப்படம் பார்க்க விரும்பாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது வேறு சானல் நிகழ்ச்சிகள்.. அல்லது நகைச்சுவை சானல்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications