காலத்தை வென்றவன் நீ...காவியமானவன் நீ!
சென்னை: சன் டிவியில் வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலத்தை வென்ற காவியங்கள் என்று, சரித்திரம் படைத்த படங்கள் இரவு 9: 30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. காலத்தை வென்ற கவியங்கள் எனும்போது, பழைய படங்கள் என்கிற ஆவலில் முதியவர்களை டிவி பார்க்க வைக்கும் முயற்சியாக இது இருக்கிறது.
அதே சமயம் சிவாஜி, எம்ஜிஆர் ரசிகர்கள் இவர்கள் இருவர் படத்தைத் தவிர வேறு படங்களை அவ்வளவு ஈடுபாட்டுடன் பார்ப்பதில்லை. அவர்களுக்கு இந்த வரிசைப் படங்கள் மிகவும் திருப்தி அளிப்பதாக இருக்கும்.

திருவிளையாடல் வசனம்
வரும் திங்கள் அன்று இரவு 9:30 மணிக்கு திருவிளையாடல் படம் ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் நாகேஷ், சிவாஜி பேசும் வசனங்க்கள் திருவிளையாடல் வசனங்கள் என்றே தனி கேஸட்ஸ் விற்ற காலம் உண்டு. இப்போதும் தொலைக்ககாட்சிகளில் யூடியூப் சானல்களில் திருவிளையாடல் வசனம் என்று ஒளிபரப்பப் பட்டு வருகிறது.

அன்பே வா
என்னதான் புதுமை என்று வாட்சாப் போன்ற சமூக வலைத் தளங்கள் அழைக்கப்பட்டாலும், இன்னமும் இதில் எம்ஜிஆர் படத்தை தங்களது வாட்சாப் டிபியாக வைத்துதான் இருக்கிறார்கள். வயதானவர்கள் வாட்சாப்பில் மட்டும் இல்லை.. நடுத்தர வயதினர் வாட்சாப்பிலும் இந்த டிபி இன்றும் இருக்கிறது. அந்த அளவுக்கு மக்களின் மனதை வென்றதோடு காலத்தையும் வென்ற மக்கள் திலகம் எம்ஜிஆர், கனவுக்கன்னி சரோஜா தேவியுடன் இணைந்து நடித்த அன்பே வா படம் வரும் செவ்வாய் அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

சிவாஜி பத்மினி
சிவாஜி பாலையா காமெடி ஒருபுறம்... ஆச்சி மனோரமாவின் வெகுளியான காமெடி ஒரு பக்கம் என்று இருந்தாலும், நடுவில் நாகேஷ் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் காமெடி செய்வார். இவர்களோடு, புகழ்பெற்ற ஜோடியான சிவாஜி பத்மினி சேர்ந்து நடித்து இருக்கிறார்கள். மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்கிற பாடலை கேட்கும்போது தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்க்கும் ஆசை வரத்தானே செய்யும்...!

நான் ஆணையிட்டால்
நான் ஆணையிட்டால் என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டால் எம்ஜிஆர் சாட்டையை எடுத்து விளாசிய அந்த காட்சிகள் கண்முன்னால் விரியாமல் இருக்குமா என்ன? பிஎம்ஜிஆர் படங்களை பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த படம் இது... இந்த படம் மூலம் மக்களின் எங்க வீட்டு பிள்ளை என்று ஆனார் எம்ஜிஆர். இதை மறக்க முடியுமா? இந்த படத்தை விஜாயழன் அன்று இரவு 9:30 மணிக்கு சன் டியிவில் பார்க்கலாம்.

கல்யாண சமையல் சாதம்
கல்யாண சமையல் சாதம்.. காய்கறிகளும் பிரமாதம்...பாடலால் இன்று உள்ள குழந்தைகளும் இந்த படத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.இதில் உள்ள மாயாஜாலங்கள் வயதைக் கடந்து காலத்தை வென்றவை.பாடல்கள் அத்தனையும் மாயாஜாலங்கள் நிறைந்தவை.. காட்சிகளும் அப்படித்தான். மாயாபஜார் படம் வரும் வெள்ளி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. பார்த்து.. சிரித்து மகிழலாம்.












Click it and Unblock the Notifications