என்னாது சந்திரலேகா சீரியலுக்கு விரைவில் கிளைமாக்ஸ்?.. "கன்னித்தீவு முடிகிறதா?.. ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: சந்திரலேகா சீரியல் விரைவில் முடிவுக்கு வர போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீரியல்தான் மிக நீண்ட நெடிய சீரியலாகும்.
பெரும்பாலும் சீரியல்களில் லாஜிக் இல்லை, நடைமுறைக்கு ஒவ்வாத காட்சிகள், அழுகாச்சி, பெண்களுக்கு பெண்களே எதிரி போல் காட்டுவது, கள்ளக்காதலை ஊக்குவிப்பது உள்ளிட்டவைகளால் பலர் சீரியல் பார்ப்பதில்லை.
ஆனால் பொழுதுபோக்கிற்காக சீரியல் பார்க்க நினைத்தால் பல ஆண்டுகளுக்கு நீண்டு கொண்டே போகிறது. அதாவது டிஆர்பி ரேட்டில் முன்னணியில் உள்ள சீரியலில் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டாலும் அதில் ஒரு ட்விஸ்டை வைத்து அதை தேவையே இல்லாமல் நீட்டி கொண்டே போவதால் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

சுவாரஸ்யம்
அந்த வகையில் முதலில் சுவாரஸ்யமாக இருந்த சீரியல் தற்போது பயங்கர போராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். அதுதான் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சந்திரலேகா சீரியலாகும். மீனா மற்றும் வசுந்தரா ஆகியோர் சகோதரிகள். இவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டுவிடுவார்கள்.

மீனா
இவர்களுக்கு திருமணமாகி மீனாவுக்கு லேகாவும் வசுந்திராவுக்கு சந்திராவும் பிறப்பார்கள். ஆனால் மருத்துவமனைக்கு வரும் குழந்தை கடத்தல்காரர்கள் சந்திராவை மீனாவிடமும் லேகாவை வசுந்திராவிடமும் மாற்றி வைத்து விடுகிறார்கள். இந்த விஷயம் மீனாவுக்கு மட்டும் தெரியும்.

சந்திரா லேகா
இந்த சீரியலில் சந்திரா, லேகா ஆகியோருக்கு சில பிரச்சினைகள் எழுகின்றன. அவர்கள் அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியேறி மீண்டு வருகிறார்களா என்பதுதான் கதை. இந்த சீரியல் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. இதுவரை 2000 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியல்தான் முதல் நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலாகும்.

1000 எபிசோடு
ஏதோ 500, 1000 எபிசோடுகள் வந்தவுடன் முடிவுக்கு கொண்டு வராமல் இப்படி 8 வருஷமாக இழுத்து வருவதால் மக்களுக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் விரைவில் முடிவடைய போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது விரைவில் கிளைமாக்ஸ் சீன்கள் எடுக்கப்படுகிறதாம். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

விரைவில் கிளைமாக்ஸ்
கன்னித்தீவு கதையை போல் இருப்பதாகவும், சீரியல் முடியட்டும் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். 4 அல்லது 5 வருஷம் ஓடிய செம்பருத்தி சீரியலிலேயே அத்தனை ஒப்பாரி வைத்தார்களே 8 ஆண்டுகள் ஓடிய சீரியலில் என்னென்ன இருக்குமோ? என்கிறார் நெட்டிசன் ஒருவர். தயவு செய்து முடிங்க, நான் பிளஸ் 1 படிக்கும் போது ஸ்டார்ட் பண்ண சீரியல், நான் பிஇ முடிச்சிட்டு அப்பறம் எம்பிஏ படிச்சிட்டு இப்போ வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன், இன்னும் முடிக்காம வச்சிருக்கீங்களே என்கிறார் இன்னொரு வலைஞர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications