Chithi 2 Serial: என்னம்மா ஆச்சு.. சித்தி 2 ஸ்பெஷல் ஸ்லாட்டை டப்புன்னு கட் பண்ணிட்டாங்களே!
சென்னை:சன் டிவியில் வருகிற 22ம் தேதி ஞாயிற்று கிழமை சித்தி 2 சீரியலுக்கு சன் டிவி ஸ்பெஷல் ஸ்லாட் ஒதுக்கித் தந்து இருந்தது. அதற்கான அறிவிப்பையும் சன் டிவி வெளியிட்டது. ராதிகா சரத்குமார் கூட வருகிற ஞாயிறு 22ம் தேதி பூமி பூஜை போடப்போகிறோம்.
இரவு 9:30மணி முதல் இரவு 10:30 மணி வரை ஒளிபரப்பாகும். சித்தி 2 சீரியல் காணத் தவறாதீர்கள் என்று அடிக்கடி அறிவித்து வந்தார். இந்த அறிவிப்பை திங்கள், செவ்வாய் வரை வெளியிட்டு வந்த சன் டிவி புதன் கிழமையோடு சுத்தமாக நிறுத்திக் கொண்டது.
இதையடுத்து சன் டிவி எப்போதும் போல ஞாயிறு டபுள்ஸ் என்று பேக் டு பேக் படங்களாக ஒளிபரப்பத் திட்டமிட்டு டிரெயிலர் வெளியிட்டு வருகிறது. ஆக. சித்தி 2 சீரியலுக்கான ஸ்பெஷல் ஸ்லாட் ரத்தாகிவிட்டது.

படப்பிடிப்பு இல்லை
மார்ச் 31 ம் தேதி வரை சின்னத் திரை, பெரியத் திரை என்று எந்த படப்பிடிப்பும் இல்லை. எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், சின்னத்திரைக்கு சீரியல் எடுப்பவர்கள் பாடுதான் திண்டாட்டமாகி உள்ளது.இந்த வாரத்தில் போட்ட காட்சிகளை ஸ்லோமோஷனில் ஃபிளாஷ்பேக்காக போட்டு, பாடலை முழுவதுமாக ஒளிக்கவிட்டு என்று அட்ஜஸ்ட் செய்துவிட்டார்கள்.

வரும் வாரத்தில்
வரும் வாரத்தில் சீரியல் தயாரிப்பாளர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை. சன் டிவியில் ஒளிபரப்பிய எபிசோட்களையே திரும்ப ஒளிபரப்புவர்களா.. இல்லை பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதை கருத்தில் கொண்டு சன் டிவி பொங்கல் திருநாளை வெறும் படங்களாக ஒளிபரப்பிக்கொண்டு இருந்ததே அதே போல இப்போதும் படங்களை சன்டிவி ஒளிபரப்பி தனது வர்த்தகத்தை நிலை நிறுத்திக் கொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

படப்பிடிப்பு ரத்து
படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால்தான் ராதிகாவின் சித்தி 2 சீரியலுக்கு சன் டிவி ஒதுக்கின ஸ்பெஷல் ஸ்லாட்டை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. இன்று சனிக்கிழமை வரை சீரியல்கள் ஒளிபரப்பப் பட்டாலும். திங்கள் முதல் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒருவர் அட்வான்ஸாக ஷூட்டிங் செய்து முடித்து இருந்தாலும் கூட மற்றவர்களிடம் ஷூட்டிங் எபிசோட் இருக்காது என்பதால். இதை கணக்கில் வைத்தே தொலைக்கட்சிகள் முடிவு எடுக்கும்.

ஞாயிறு டபுள்ஸ்
ஞாயிறு டபுள்ஸ் என்று ஒளிபரப்பப்படும் படங்களில் ஒன்றை நிறுத்திவிட்டு, சன் டிவி ஸ்பெஷல் ஸ்லாட் ஒதுக்கித் தரும்.ஆனால், சித்தி 2 சீரியலுக்கு ஒதுக்கித் தந்த அந்த நேரத்தில் ஞாயிறு டபுள்ஸ் என்று இரண்டு படங்களை ஒளிபரப்பத் திட்டமிட்டு இருக்கும் சன் டிவி சித்திக்கு ஒதுக்கிய ஸ்பெஷல் ஸ்லாட் நேரத்தில் நடிகர் பரத் நடித்த பொட்டு என்கிற படத்தை ஒளிபரப்பத் திட்டமிட்டு இருக்கிறது சன் டிவி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications