சன் டிவி தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில்.. ஒரு ஸ்பெஷல் இருக்கு.. கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி டிரஸ், பட்டாசுகள், பலகாரங்கள் என்று வீட்டில் இந்த வாரம் முழுக்க களைக்கட்டிக்கொண்டு இருக்கும். இன்னும் அது வாங்கலை இது வாங்கலை என்கிற புலம்பலும் இருக்கும்.

இந்த நேரத்தில் தொலைக்காட்சி சானல்கள் கடந்த வாரம் முதலே தீபாவளி பண்டிகை நிகழ்ச்சிகளைத் தயாரித்து ப்ரோமோ வெளியிட்டு வருகின்றன.

இதில் முந்திக்கொண்டு நிகழ்ச்சி ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது சன் டிவி. பட்டிமன்றம் மட்டும் இப்போதைய ப்ரோமோவில் இ டம் பெற்று பட்டையைக் கிளப்பி வருகிறது.

பட்டிமன்றம் நிகழ்ச்சி

பட்டிமன்றம் நிகழ்ச்சி

எப்போதுமே சன் டிவியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் களைக்கட்டும். தீபாவளி, தமிழ் வருடப் பிறப்பு, பிள்ளையார் சதுர்த்தி, தைத்திருநாளாம் பொங்கல் என்று எல்லா நேரத்திலும் இவரின் பட்டிமன்றம் இவர் குழு என்று .அன்றையை பொழுது களைக்கட்டும்.

பட்டிமன்றத்தில் வேற லெவல்!

பட்டிமன்றத்தில் வேற லெவல்!

இந்த முறையான தீபாவளி பட்டிமன்றத்தை வேற லெவல் என்று குழு அமைத்து வேறு வடிவத்தில் நிகழ்ச்சியைத் தர இருக்கிறார் சாலமன் பாப்பையா. இதில் சிரிப்பு வெடிகுண்டு ராஜா மற்றும் பாரதி இடம் பெறுகிறார்கள். அவர்கள் தவிர இந்த பட்டிமன்ற குழுவில் அனைவரும் புதிது. புதிது என்றால் தெரிந்த முகங்களில் திரையுலகப் பிரபலங்கள்.

நான் இப்படி

நான் இப்படி

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற டயலாக் நடிகர் விவேக்குக்கு மட்டும் சொந்தமில்லை. அதை விவேக்கை பேச வைக்கும் இயக்குநராக நடித்த நடிகரும், இயக்குநருமான மனோபாலாவுக்கும் சொந்தம். இவரின் டயலாக்கில் பட்டிமன்றத்தை ஆரம்பிக்கிறார் சாலமன் பாப்பையா.

பாக்கியராஜ் ஆர்.கே.செல்வமணி

பாக்கியராஜ் ஆர்.கே.செல்வமணி

பாடலாசிரியர்கள் சினேகன், பா.விஜய், இயக்குநர்கள் பாக்கிராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த முறை தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் தங்களது விவாதத்தை எடுத்து வைக்கின்றனர். இது வித்தியாசமான முயற்சியாக ஆவலுடன் எதிர்பார்க்கவும் வைத்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+