எதிர்நீச்சல் சீரியல் குறித்து "பகீர்” கருத்து தெரிவித்த சுப. வீரபாண்டியன்.. இதுதான் காரணமாம்..!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் குறித்து அரசியல் பிரமுகரான சுப. வீரபாண்டியன் பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய வீட்டில் எதிர்நீச்சல் சீரியல் பார்க்கப்படுகிறது என்று கூறியிருந்தார். அதுபோல நடிகர் விஜய்யின் அம்மாவான சோபாவும் நானும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரசியல் பிரமுகராகவும், பழம்பெரும் இயக்குனர் என்.எஸ் முத்துக்குமாரனின் சகோதரனும் ஆன சுப. வீரபாண்டியன் தானும் எதிர்நீச்சல் சீரியல் பார்த்து வருகிறேன் என்று அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் விவரித்து பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலுக்கு என்று ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த சீரியல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக இருந்து வருவதும் இப்போதைய சூழ்நிலையிலும் பல வீட்டில் குணசேகரன் போன்ற ஆண்கள் பெண்களை அடக்கி ஆண்டு வருகிறார்கள் என்பது பற்றியும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
இதனாலேயே இந்த சீரியலை பார்க்கும் பல ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தங்கள் மனக்குமுறல்களை கொட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அரசியல் பிரமுகர் சுப. வீரபாண்டியன் தான் எதிர்நீச்சல் சீரியல் பார்த்து வருகிறேன் என்று உணர்வு பூர்வமாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.

அதில் நான் ஒரு நாடகம் பார்க்கிறேன் என்று என்னுடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நீங்களுமா தொலைக்காட்சி சீரியல் எல்லாம் பார்க்கிறீர்கள்? என்று கேட்டார். அவர் நீங்களுமா? என்று கேட்டதும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களை பார்ப்பது தகுதி குறைவு என்று கருதுவது எனக்கு புரிந்தது.
ஆமா, நம் பொதுபுத்தியில் அப்படி ஒரு கருத்து உறைந்து கிடைக்கிறது, நிஜம்தான். கூடுதல் வேலையில்லாதவர்கள் பொழுது போகாமல் வீட்டில் இருக்கிற பெண்கள் தான் இந்த சீரியல்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்ற கருத்து நம்மிடம் இருக்கிறது. இந்த எண்ணம் ஒரு விதத்தில் நாம் சக நண்பர்களையும் வீட்டு பெண்களையும் அவமதிக்கிறது என்று சொல்ல வேண்டும்.
எல்லா தொலைக்காட்சிகளிலும் சேர்ந்து ஒரு நாளுக்கும் ஏறத்தாழ 100 சீரியல்கள் ஒளிபரப்பாகும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதைப் அனைத்தையும் பார்த்து நேரத்தை வீணாக்குவது சரியில்லை. அதற்காக தொலைக்காட்சி நாடகங்களை பார்ப்பதை தவறு என்றோ, தகுதி குறைவு என்றோ கருதுவதும் சரியில்லை. அப்படி கருதுவது ஒரு கலையை கலை வடிவத்தை நாம் இழிவு செய்வதே ஆகும்.
கடந்த மூன்று மாதமாக நான் ஒரு சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்ற நாடகங்கள் எல்லாம் சரி இல்லாதவை என்று அதற்கு பொருள் அல்ல. இந்த நாடகம் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்கு மேல் பிற நாடகங்களை பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நான் தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் கூட்டங்களுக்கு போய்விட்டு இரவு தாமதமாக வந்தாலும் என்னுடைய மனைவியிடம் நடந்த கதையை கேட்டு தெரிந்து கொள்கிற ஒரு நாடகம் உண்டு அது "எதிர்நீச்சல் சீரியல்".
அந்த நாடகத்தில் வீட்டிலே பெண்களை பூட்டி வைக்கும் மடமையை எதிர்த்து கதை சொல்கிறது. பெண்கள் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்னும் தெளிவை படம் பிடித்து காட்டுகிறது. ஆண்களை விட அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து நிற்கும் பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் எனும் உண்மையை ஒவ்வொருவரும் மூளையிலும் உரைக்கிற மாதிரி இந்த சீரியலின் கதை சொல்கிறது.

அதனால் எனக்கு அந்த நாடகம் பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த கதையை சொல்லும் அழகு நாடகத்தில் விறுவிறுப்பு உரையாடல்களின் கூர்மை, பட்டு தெறிக்கும் நகைச்சுவை என்று பல்வேறு செய்திகள் பார்க்கிறவர்களை ஈர்க்கின்றன. மறந்து விடாமல் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு அத்தனை அருமையாக இருக்கிறது.
அவர்களின் குரல்கள் மட்டுமல்லாமல் முகமும் பேசுகிறது. கண்கள் பேசுகின்றன, நடை உடை பாவனைகள் கூட நடிப்பை வெளிப்படுத்துகின்றது. நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் அனைவரையும் நாம் பாராட்ட வேண்டும். சரி இரவு 9:30 ஆகப்போகிறது. நாடகம் தொடங்கிவிடும்.. நாம் பிறகு பேசுவோம், என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications