இப்போதுமா தொலைக்காட்சிகளில் நேரலை நிகழ்ச்சிகள்?
சென்னை: கோவிட் 19 தொற்று காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. அதிலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தக் கூடாது என்றும் அறிவிப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன.
எந்த தொலைக்காட்சிகளிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நேரலையில் வழங்குவது இல்லவே இல்லை. ஆனால், சன் மியூசிக் தொலைக்காட்சி லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து தினமும் மாலை தவறாமல் நேரலை கேளிக்கை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
மக்கள் தொலை பேசியில் பங்கு கொண்டு, நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் எதாவது பேசுவது... பிறகு பாடல்களை ஒளிப்பரப்ப கண்டு ரசிப்பது என்று. இந்த நிகழ்ச்சியை லாக்டவுன் நேரத்திலும் தொடர்ந்து செய்து வருகிறது சன் மியூசிக் சானல்.

இது தப்பில்லையா?
செய்தி சானல்கள் மட்டுமே அவ்வப்போது கொரோனா பற்றிய செய்திகளைத் தர லாக்டவுன் நேரத்திலும் தேவைப்படும் செய்தியாளர்கள், பணியாளர்களை வைத்து செய்திகள் வழங்கி வருகிறது. இது முக்கியம் என்பதால்...இதற்கு கெடுபிடிகள் ஒன்றும் இல்லை.

கேளிக்கை நிகழ்ச்சி
சன் நெட்வொர்க்கின் சன் மியூசிக் தொலைக்காட்சியில் என்னதான் ஸ்டுடியோவில் வைத்து நேரலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறோம் என்று சொன்னாலும். அதற்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து பேர் வேண்டும். நிகழ்ச்சியின் பெயர் ஹிட் லிஸ்ட்டாம்.

ஹிட் பாடல்கள்
இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் துவங்கி 7 மணி வரை என்று ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அண்மையில் வெளியான புதிய பாடல்களை வரிசையாக ஓடவிட்டு. இதில் இருந்து எதாவது ஒரு பாடலை ஒளிபரப்புகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அனுமதி யார் தருகிறார்கள்?

அவரை மாதிரி பேசுங்க..
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபரிடம், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜே...உங்களுக்கு தனித்திறமை எதாவது இருந்தா அதை காட்டுங்க என்பதும்.. எனக்கு அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார் என்று அவர் சொல்வதும்...இல்லையா அப்படீன்னா ஆர்ட்டிஸ்ட் மாதிரி பேசுங்க..என்று வற்புறுத்துவதும்... நான் எதுக்கு சார் யாரு குரலிலாவது பேசணும்...என் குரலிலேயே பேசறேன் என்று இவர் சொல்வதும்...ரொம்ப கேவலமான நிகழ்ச்சி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications