விஜய்-ண்ணா "வெறித்தனம்".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி
Recommended Video
சென்னை: என்னங்க நேத்து சன் டிவி பார்த்தீங்களா.. பிகில் ஆடியோ லான்ச் புரோகிராம் நல்லாருந்துச்சா.. இதுதாங்க டிவி ரசிகர்களின் நேற்றைய முனுமுனுப்பாக இருந்தது. இன்னும் கூட சமூக வலைதளங்களில் இதைப் பற்றிய பேச்சுதான்.
சும்மா சொல்லக் கூடாது படம் பிரமாண்டம்னா.. சன் டிவியின் ஆடியோ லான்ச் ஒளிபரப்பும் கூட பிரமாண்டம்தான்.. ஆனால் என்ன நிறைய கட் செய்து விட்டதாக பொங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.. ஏன் பிரபலங்களுமே கூடத்தான்.
விஜய், நயன்தாரா நடிக்க, கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் இந்த பிகில். ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறி விட்டுள்ளது பிகில்.

எல்லாமே வைரல்
பிகில் தொடர்பாக எது வந்தாலும் அது வைரலாகி விட்டது. டிரெண்டிங்கில் பட்டையைக் கிளப்பி விட்டது. அந்த வகையில் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவும் கூட பிரமாண்டமாக மாறி விட்டது. வரலாறு காணாத ரசிகர் கூட்டத்தால் நிகழ்ச்சி நடந்த இடமே ரசிகர் வெள்ளமாக காணப்பட்டது.

பிரபலங்கள் தத்தளிப்பு
ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி பிரபலங்களே கூட உள்ளுக்குள் வர முடியாமல் திணறிப் போய் விட்டனராம். ஏஆர் ரஹ்மான் மகன், நடிகர் யோகி பாபு, பாடலாசிரியர் விவேக் என இந்தப் பட்டியல் ரொம்பவே நீளம்தான். நல்ல வேளை விஜய்யை முற்றுகையிட்டு சிக்கல் ஏற்படுத்தாமல் விட்டார்களே ரசிகர்கள் என நிம்மதி அடைவோம்.
|
முனுமுனுப்பு சலசலப்பு
இப்ப அது இல்லைங்க மேட்டர்.. இந்த விழாவில் பேசிய பலருடைய பேச்சை கட் செய்துதான் நேற்று சன்டிவி ஒளிபரப்பியதாக ஒரு முனுமுனுனுப்பு கிளம்பியுள்ளது. நடிகர் டேணியல் பாலாஜி நிறையப் பேசியிருந்தாராம். ஆனால் அதில் ஒரு பகுதியை கட் செய்து விட்டதாம் சன் டிவி. அவரே டிவீட் போட்டு புலம்பியிருக்காருங்க.

ஏன் இப்படி?
அது மட்டுமல்ல நடிகர் விவேக் நிறையப் பேசியிருந்தாராம். அதிலும் கூட பல பார்ட் கட் ஆகி விட்டதாம். இதுபோல எல்லோருடைய பேச்சிலும் கை வைத்து விட்டனரா என்று தெரியவில்லை. ஆனாலும் ரசிகர்கள் புலம்புகின்றனர். ஏன் இப்படி கட் பண்ணிப் போட்டார்கள் என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது.

தளபதி பேச்சு மாஸ்
இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் பேச்சுதான் செம மாஸாக இருந்தது. உண்மையிலேயே ரசிக்க வைக்கும் வகையில் பேசினார். அதை விட அவருடைய பாடி லாங்குவேஜ் சூப்பர் எக்சலன்ட். இதுவரை இல்லாத வகையில் படு கேஷுவலாக, ஜாலியாக பேசினார் என்றால் பார்த்துக்கங்களேன்.. நாங்க வெயிட்டிங்கில இருக்கோம்னா .. படத்தை பார்க்க!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications