Maharasi Serial: புவி புவின்னு பூமாதேவி கணக்கா பொறுமை காத்து...!
சென்னை: என்னங்கடா...டேய்...பாரதின்னு ஒரு பெண்ணை புவி புவின்னு பூமாதேவி கணக்கா பொறுமை காக்க வைக்கிறீங்களே...சன் டிவியின் மகராசி சீரியல்...ஓ மை கடவுளே!
புருஷன் பக்கத்தில் இருந்தாலும் பாரதிக்கு அடையாளம் தெரியலை. தமிழ் படங்களில் முகத்தில் மரு வச்சா மாறு வேஷம்னு சொல்லிக்கிற மனப்பாங்கு சீரியல்களிலும் காணக் கோடி இன்பம்....
பக்கத்திலேயே புவி இருக்கான்.. இந்த பாரதிக்கு தெரியலையேன்னு பரிதாபப் பட்ட ஜனங்க உச்சு கொட்டிக்கிட்டே மகராசி சீரியலை மனம் தளராம பார்த்துகிட்டு இருக்காங்க.

ஓவர் இழுவை
மகராசி சீரியல் ஆரம்பிச்சு ஏழெட்டு மாசம் ஆச்சு...அப்போ புவி செத்துட்டான்னு பாரதிக்கு தெரிய ரெண்டு மாசம் ஆச்சு. புவி உயிரோடு இருக்கான்னு தெரிய ஒரு மாசம் ஆச்சு. இப்போ நாலு மாசமா புவி உயிரோட இருக்கான்னு தெரிஞ்சுது.பக்கத்தில் இருக்கும் புவியை கண்டுபிடிக்க ஓவர் இழுவையா இருக்குது.

புவி புவின்னு ஓடி
பொண்டாட்டி பாரதி ஒரு பக்கம் புவி புவின்னு அழறா.. பெற்ற தாய் ஒரு பக்கம் புவி புவின்னு குமுறி அழறாங்க. இதை எல்லாம் பார்த்துகிட்டு கல்லு மாதிரி பக்கத்தில் மாறு வேஷம் போட்டுக்கிட்டு இருக்கான் புவி. இவன் இப்படி உண்மையை சொல்லாம இருக்கறதுக்கு ஒரு சப்பை காரணம் சொல்றாங்க.

புவி மியூசிக்
கோயிலில் சாமி கும்பிட்டுக்கொண்டு.. அந்த அம்மனிடம் கோபமா பேசிகிட்டு நிற்கிறாள் பாரதி. என் புவியை கண்ணில் காமிக்க மாட்டியா.. எனக்குதான் அவரை அடையாளம் தெரியலை உனக்குமான்னு முறையிடுகிறாள். அப்போது பார்த்து புவி மவுத் ஆர்கனில் வாசிக்கும் அந்த இசை காற்றோடு கலந்து வந்து பாரதியின் காதுகளை வருடி செல்கிறது.

பாரதி ஓடுகிறாள்
பாரதி இசை வரும் திசை நோக்கி ஓடுகிறாள்.. புவி புவி என்று சுற்றும் முற்றும் பார்க்க. அங்கு ஒரு ஆண் நின்று மவுத் ஆர்கன் வாசித்துக்கொண்டு நிற்கிறான். புவி புவி என்று அழைக்க திரும்பிப் பார்க்கிறான்.. அங்கு புவியின் தம்பி தமிழ்...ப்ச்.. போங்கடா நீங்களும் உங்க சீரியலும்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications