என்னது கல்யாணம் ஆயிருச்சா?.. சாந்தி முகூர்த்தமும் முடிஞ்சுருச்சா?.. என்னப்பா சொல்றீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல் பார்க்கிறவர்களுக்கு இந்த கல்யாணமும், சாந்தி முகூர்த்தமும் கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான்.. அட நாயகி சீரியல் பற்றிதாங்க சொல்றோம்.

எப்படா கல்யாணம் ஆகும் என்று ஏங்கிக் கிடந்த சீரியல் ரசிகர்களை முதலிரவையும் சேர்த்து அரங்கேற்றி குஷிப்படுத்தி விட்டனர்.

நாயகி தொடரின் நாயகி வித்யா கோபகுமார் மலையாள பொண்ணு. இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் சைவம் படத்தில் அறிமுகமானவர். நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருக்க, முதலில் படிப்பு, பிறகு உன் இஷ்டம்போல நடிப்பு என்றார்களாம் பெற்றோர்.

 சயின்டிஸ்ட்

சயின்டிஸ்ட்

ஒரு வழியா படிச்சு முடிச்சு கண் பார்வை தொடர்பான சயின்டிஸ்ட் படிப்பும் முடிஞ்ச பிறகு, தனது நடிப்பு ஆசையை கூறி இருக்கிறார் வித்யா. சென்னை ஓரளவுக்கு.. இல்லை இல்லை.. நிறையவே பிடித்துப் போக, இப்போது குடும்பத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து செட்டிலாகி விட்டார்.

 விட முடியுமா?

விட முடியுமா?

புடவை, நகைக்கடை விளம்பரம், நாயகி தொடர், இடையிடையில் சினிமா என்று நடித்தாலும், பிரபல கண் மருத்துவமனையில் சயின்டிஸ்ட்டாக வேலை பார்ப்பதை நிறுத்தவில்லை. இந்த வேலை எனக்கு ரொம்ப ஆத்ம திருப்தியைத் தருதுன்னு சொல்றார் வித்யா.

 பொண்ணு சின்சியர்

பொண்ணு சின்சியர்

பல நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரபல கண் மருத்துவமனைக்கு சென்று தனது வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவதால் மருத்துவமனை நிர்வாகம் இவரை ஃப்ரீயா விடு மாமுன்னு விட்டுட்டாங்களாம்.

 சென்னைதான் மூச்சு

சென்னைதான் மூச்சு

தமிழ் நன்றாக பேசாத தெரிந்த தனக்கு தமிழில் எழுதவும் தெரியும். வீட்டில் கூட தமிழில்தான் பேசுவேன், இப்போ கூட தாய் மொழி பேசமாட்டியான்னு அம்மா ஏக்கமாக கேட்கும்போது பல்லைக் கடித்துக் கொள்வேன் என்கிறார்.. என்ன செய்யறது, தமிழ்தான் சட்டுன்னு வருது, எங்காவது வெளியூர் போனா கூட சொந்த ஊர் சென்னையை விட்டு எங்கேயோ மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கும்.

 முடிஞ்சாச்சா?

முடிஞ்சாச்சா?

நாயகி தொடரில் நடிகை விஜயலட்சுமிக்கு பதிலாகத்தான் நான் நடிக்க வந்தேன். ஆனா, மக்களோட மனசுல ஆனந்தியா இடம் பிடிச்சுட்டேன். உனக்கும் திருவுக்கும் கல்யாணம் நடக்குமா, நடக்காதான்னு முதலில் கேட்டாங்க. அடுத்து முதலிரவு எப்போ நடக்கும்னு கேட்டாங்க. இப்போ அதுவும் நடந்தாச்சு என்று வெட்கப்பட்ட அவரை அட என்று பார்க்க.. தடுத்து நிறுத்தி.. ஹலோ, சீரியல்லதாங்க என்று கூறி சிரித்தார்.

 சிரிச்ச முகத்தில்?

சிரிச்ச முகத்தில்?

கேரளா மழையில் இவர்களது வீடு மிக மோசமான நிலையில் இருந்ததாம். எவ்வளவோ இழப்பு, நிறைய விலை உயர்ந்த உடைகள் எல்லாம் தண்ணியில வீணாய் போயிருச்சு என்கிறார் சோகமாக. சரி அதை விடுங்க இவருக்கு ஒரு லவ்வர் இருக்காராம். அவர் நாயகி தொடர் முடிஞ்சதும் இவரை கைப்பிடிக்க காத்திருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+