சன்னுக்கு என்னாச்சு.. ரொமான்ஸ் துள்ளி விளையாடுதே... கிளுகிளுப்பூட்டும் புதுசுகள்!
Recommended Video

சென்னை: சன் டிவி சீரியல்களில் எப்போதும் காதல் இருக்கும், கணவன் மனைவிக்கு உண்டான ஊடல்கள் இருக்கும். இதை எல்லா சீரியல்களிலும் பட்டும் படாமல் கடைப்பிடிச்சு வந்துச்சு சன் டிவி.
நடுவில் சீரியல்கள் ஆரம்பிக்காம இருந்தது விஜய் மற்றும் ஜீ தமிழ் டிவிதான். ராஜ் டிவியில கூட ஹிந்தியிலிருந்து டப் செய்தாலும், கதையம்சம் உள்ள சீரியல்களை மட்டும்தான் டெலிகாஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
கலைஞர் டிவியிலும் கதைகளுக்கு முக்கியயத்துவமான சீரியல்கள் மட்டும்தான் ஒளிபரப்பிகிட்டு வந்தாங்க.இப்போதும் அப்படிதான்..

விஜய் டிவி
சீரியலில் வெற்றி என்கிற காலத்தில் முதலில் சன்னுக்கு போட்டியாக களம் இறங்கியது விஜய் டிவிதான். தங்கள் பட்ஜெட்டில் கதையில சரக்கு காமிக்க முடியாதுன்னு நினைச்ச விஜய் டிவி, கிளுகிளுப்பில் இறங்கினா பேர் வாங்கிடலாம்னு முடிவு பண்ணுச்சு போல.

ஜீ தமிழ்
விஜய் டிவியில கிளுகிளுப்புக்கு மட்டுமே முதலாவதாவும், அரைத்த மாவை அரைத்து பழம் பெருமையை கொண்டாடுவதையும் சீரியலாக்கி ஒளிபரப்ப விஜய் டிவி மக்களின் கவனத்தை இழுத்துச்சுன்னு சொல்லலாம். இந்த சமயத்துல ஜீ தமிழ் விஜய் டிவியோட போட்டி போட முடிவு செய்து, அதுவும் விஜய் பாணியை கடைபிடிச்சு சீரியலில் குதித்தது. விஜய் டிவியில கிளுகிளுப்புக்கு மட்டுமே முதலாவதாவும், அரைத்த மாவை அரைத்து பழம் பெருமையை கொண்டாடுவதையும் சீரியலாக்கி ஒளிபரப்ப விஜய் டிவி மக்களின் கவனத்தை இழுத்துச்சுன்னு சொல்லலாம். இந்த சமயத்துல ஜீ தமிழ் விஜய் டிவியோட போட்டி போட முடிவு செய்து, அதுவும் விஜய் பாணியை கடைபிடிச்சு சீரியலில் குதித்தது.

ரொமான்ஸ்
சீரியலில் முதலிடத்தில் இருப்பது என்னவோ சன் டிவிதான்... ஆனா, போட்டிக்கு ரெண்டு சேனல்கள் கலகலப்பு, கிளுகிளுப்புன்னு சீரியலில் கலக்க.. நம்ம ஏன் தூர்தர்ஷன் பொதிகை மாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணிருச்சு. புதுசுகளை களம் இறக்க ஆரம்பிச்சுருச்சு.

சீரியலில்
சன் டிவியின் தெய்வமகள் சீரியலில் சத்யா பிரகாஷ் ரொமான்ஸ் ரொம்ப பிரபலம். உண்மையான தம்பதிகள் மாதிரி, காதல் கசிந்து வழிய, ரொமான்ஸ் துள்ளி விளையாடுச்சு. இதனாலேயே மக்களுக்கு இந்த ஜோடி ரொம்ப புடிச்சு போயி, ஏதாவது ஒரு நிகழ்ச்சின்னா கூட சத்யா பிரகாஷை வச்சு நடத்தினாங்க.

ராணி
வாணி ராணி சீரியலில் கூட ராதிகா மகன்களில் கவுதம் தனது மனைவியுடன் அடிக்கடி ரொமான்ஸ் பண்ணுவார். மற்றவர்கள் காதல் லிமிட்டுடன் இருக்கும்.

ரொம்ப
நாயகியில ஏழைப்பொண்ணுதான் ஆனந்தின்னாலும், திருவுக்கு ஆனந்தி மேலும், ஆனந்திக்கு திரு மேலும் ஒரே சமயத்தில் காதல் அரும்பிய வேகத்தில் ரொமான்ஸும் ஆரம்பிச்சுருது. அது மட்டுமா எப்போ, எங்கே பார்த்தாலும் ரொமான்ஸ் பார்வை, கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பதுன்னு கொஞ்சம் அதிகம்தான். ஆனந்திக்கு கையில அடிபட்டு, திரு செயற்கையா குளிக்க ஷவர் ரெடி பண்ணும்போது அந்த குளியலறை ரொமான்ஸ்.. அட ..அட.. துள்ளல்.

பாஷையில்..
இப்போ பிரியமானவள், ரோஜா சீரியலில் ரொமான்ஸ் துள்ளி விளையாடுது ஆனாலும் சாலமன் பாப்பையா பாஷையில் சொல்லணும்னா.. ஆனாலும் துள்ளலாத்தாய்யா இருக்குது... பார்க்கறவங்களுக்கு கிளுகிளுப்பூட்டுதேய்யா... நல்லாதாய்யா இருக்கு.. நடக்கட்டும்யா!












Click it and Unblock the Notifications