சன் பிக்சர்ஸ்.. நம்ம வீட்டு பிள்ளை கொண்டாட்டம்!
சென்னை: கதை இல்லாத படத்தை கூட ஓட வைப்பதில் சன் பிக்சர்ஸ் செம கில்லாடி என்று காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் பெயர் வாங்கியது. என்றாலும் சன் பிக்சர்ஸ். பின் நாட்களில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தயாரித்து வருகிறது.
கதை கேட்க என்று நிறைய நேரத்தை ஒதுக்கி, அதோடு, இந்த இடத்தில் இதை எப்படி செய்யப் போகிறீர்கள், அந்த இடத்தில் கதை ஏன் அப்படி என்று பல கேள்விகள் கேட்கப்பட்டு படத்தை தயாரிக்கும் முடிவுக்கு வருகிறது என்கிறார்கள்.
அண்மையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து செம ஹிட் ஆன திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தின் ஸ்டார் காஸ்ட் சிவ கார்த்திகேயன் மட்டும் அல்ல, இயக்குநர் பாண்டிராஜுடன் ஆன இவரின் கூட்டணி.

ஆயுத பூஜை கொண்டாட்டம்
சன் டிவி ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக நம்ம வீட்டு பிள்ளை கொண்டாட்டம் என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது .இதில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் ஸ்டார் காஸ்ட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துக் கொண்டு உள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் மிஸ்சிங்.

சிவகார்த்திகேயன் பாண்டியராஜ்
சிவ கார்த்திகேயன், பாண்டிராஜ் காம்போ என்றாலே களைக்கட்டும். ஆனால், இந்த படத்தை வைத்து, பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சி, இப்போது ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக நம்ம வீட்டுப்பிள்ளை கொண்டாட்டம் என்று கல்லா கட்டி வருகிறது சன் டிவி.

சிறப்பு நிகழ்ச்சி
மதியம் 2 மணிக்கு ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி என்று நம்ம வீட்டுப்பிள்ளை கொண்டாட்டம் நிகழ்ச்சியை ஷூட் செய்து ஒளிபரப்ப உள்ளார்கள். இதில் சிவ கார்த்திகேயன், படத்தின் கதாநாயகி இம்மானுவேல் இருவரும் கை பலத்தை காண்பிக்கும் நிகழ்வை எக்குத் தப்பாக ஆங்கிலம் பேசி சூரி துவக்கி வைப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

காற்றுள்ளபோதே தூற்றி
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் முறையை காலம் காலமாக பின்பற்றி வரும் சன் டிவி, இன்னமும் தியேட்டரில் கூட்டம் குறையாமல் ஓடிக்கொண்டு இருக்கும் தனது தயாரிப்பு படமான நம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் வெற்றியை விட்டு வைக்குமா என்ன? அந்த வெற்றியைப் பயன்படுத்தி ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக நம்ம வீட்டுப்பிள்ளை கொண்டாட்டத்தை அறிவித்து, ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications