போட்ரா வெடியை.. இந்த வாரம் முழுக்க பர்த் டே கொண்டாட்டமாம்ய்யா!
சென்னை: சன் டிவி இந்த வாரம் முழுக்க தமிழ் புத்தாண்டு அதாவது சன் டிவியின் பிறந்த நாள் தினத்தை கொண்டாடும் வகையில் திரைப்படங்களாக அறிவித்து ஒளிபரப்பி வருகிறது.
சன் டிவி தமிழ் புத்தாண்டு என்று சித்திரை முதல் திருநாளை கொண்டாடாவிட்டாலும், சன் டிவி ஒளிபரப்பாகத் துவங்கிய நாள் என்று சித்திரை திருநாளை கொண்டாடி வருகிறது.
இந்த வருடம் இந்த நாளின் சிறப்பு கொண்டாட்டத்தை சித்திரைக்கு முதல் நாள் திங்கள் அன்றே ஆரம்பித்து சன் டிவி கொண்டாடி வருகிறது. அதன் படி திங்கள் முதல் வரும் ஞாயிறு வரை திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

திரைப்படங்கள் விளம்பரங்கள்
திங்கள் முதல் சித்திரைத் திருநாள் மற்றும் சன் டிவி ஆரம்பித்த நாள் அதாவது சன் டிவி பிறந்த நாள் கொண்டாட்டம் என்று விளம்பரதாரரிடம் மொத்த ரேட்டில் விளம்பரங்களை ஃபிக்ஸ் செய்துள்ளது. விளம்பரங்களுக்கு ஒரு வார திரைப்படங்கள் ஒளிபரப்ப என்று அமவுண்ட் பேசி ஒப்பந்தம் செய்துக்கொண்டு இருக்கும் சன் டிவி.அதன்படி தொடர்ந்து படங்களை ஒளிபரப்பி வருகிறது.

பழைய சீரியல்கள்
சித்தி, மெட்டி ஒலி , தங்கம் என்று பழைய சீரியல்களும், அண்மையில் ஒளிபரப்பி வந்த சீரியல்கள் மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து என்றும் சன் டிவியில் லாக்டவுன் காலத்தில் ஒளிபரப்பாகி வருகின்றன. இது கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதால், சன் டிவி ஒரு வார சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் என்று படங்களை ஒளிபரப்பி வருகிறது.

லாக்டவுன் காலம்
லாக்டவுன் காலத்தில் மக்கள் முழுவதுமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். எந்த சானலைத் திருப்பினாலும் மக்களுக்குத் திருப்தி இல்லை. என்றாலும் எதையாவது கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்கிற சூழலில் படங்கள் அவர்களின் முக்கிய சாய்ஸாக இருக்கிறது. இதனால் சானல்கள் திரைப்படங்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றன.

கிளாசிக் மேட்னி
சன் நெட்வொர்க் சானல்களில் கே டிவி, சன் லைஃப் சானல்கள் வரிசையாக திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றன. இந்த வாரம் முழுக்க சன் டிவியிலும் திரைப்படங்களே ஒளிபரப்பாக உள்ளன.கே டிவியில் தினமும் கிளாசிக் மேட்னி என்கிற பெயரில் படங்களுக்கு ப்ரோமோ போட்டு ஒளிபரப்பி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications