Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன் டிவியில் இந்த வாரம் அமர்க்களமான... பணக்காரன் வாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுனோடு, விடுமுறை தினங்களும் சேர்ந்து கொள்ள...சன் டிவி மக்களை தங்களது தொலைக்காட்சி வசம் கட்டிப்போட பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது.

அதாவது ஆரம்ப காலத்தில் இந்த வாரம்.. அந்த வாரம் என்று வரிசையாக ஒரு பெயர் வைத்து ஈர்ப்புடன் படங்களை பார்க்க வைக்க..அந்த பெயரை சொல்லி அந்த வாரம் ஒளிபரப்ப இருக்கும் படங்களை விளம்பரப்படுத்தும்.

அதே யுக்தியை கையாண்டு இப்போது, காலத்தால் மறக்க முடியாத படங்கள் என்று எம்ஜிஆர், சிவாஜி சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்பியது...அடுத்து வடிவேலு நகைச்சுவை படங்கள் வாரம்...பிறகு 80களின் சூப்பர் ஹிட் படங்கள் என்று விளம்பரம் செய்தது. இந்த வாரம் 90 களின் சூப்பர் ஹிட் படங்கள் என்று பணக்காரன், அமர்க்களம் போன்ற படங்களை ஒளிபரப்ப இருக்கிறது.

 ரஜினி நடித்த பணக்காரன்

ரஜினி நடித்த பணக்காரன்

ரஜினி, கவுதமி நடிப்பில் இளையராஜா இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற பணக்காரன் படம் இன்று அதாவது திங்கள் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு வெளங்க இங்கு வாழணும் என்கிற திருமண ஜோடிக்கான பாடல், இன்றுவரை எங்கு ஒரு திருமணம் என்றாலும் பட்டி தொட்டி வரை எங்கும் ஒலிக்கிறது.அப்படியான புகழ்பெற்ற பாடல் இடம்பெற்ற படம் இன்று இரவு சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

 விஜயின் லவ் டுடே

விஜயின் லவ் டுடே

தளபதி விஜய், நடிகை சுவலட்சுமி இணைந்து நடித்த லவ்டுடே படம், இன்றைய காதல் இப்படி இருக்கணும் என்று வித்தியாசமான கோணத்தில் காதலை சொல்லிய படம். அப்போது இளசுகள் மத்தியில் விஜய் சூப்பர் ஹீரோவாக இடம் பெற்றதில் இந்த படத்துக்கும் பெரும் பங்கு உண்டு.90களில் வெளியான இந்த படத்தை 90 களின் சூப்பர் ஹிட் பட வரிசையில் சேர்ந்து இருக்கும் சன் டிவி, செவ்வாய் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பு செய்ய உள்ளது.

 வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை

வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான மாநகர காவல் படத்தை சன் டிவி புதன் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்து இருப்பார். வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை படத்துக்கு விஜயகாந்தின் டான்ஸ் அவ்வளவு நன்றாக இருக்கும்.படத்தில் இடம்பெற்று இருக்கும் அத்தனை பாடல்களுமே நன்றாக இருக்கும். விஜயகாந்த நடிப்பை ஆசை தீர இந்த படத்தில் பார்க்கலாம்.

 சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்

அஜீத், ஷாலினி இருவரும் இந்த படத்தில் நடிக்க ஜோடி சேர்ந்து, காதல் மலர்ந்து உண்மை ஜோடியாகவும் மாறிப்போனார்கள். அஜீத் வித்தியாசமான வேடத்தில் நடித்து, அவரது புகழுக்கு மேலும் மகுடம் சேர்த்த படம் அமர்க்களம். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்...ஆறாம் விரலாய் பேனா கேட்டேன் என்று அஜீத் பாடி நடிக்கும் காட்சிகள் அருமையாக இருக்கும். இந்த படத்தை வியாழன் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி.

 பாஸ் பெரிசா ஃபெயில் பெரிசா

பாஸ் பெரிசா ஃபெயில் பெரிசா

அர்ஜுன் நடித்த ஜென்டில்மேன் ..இதில் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. கவுண்டமணி செந்தில் காமெடி... ஜிக்குபுக்கு ரயிலே பாடல்...பிரபு தேவா டான்ஸ், கவுதமி ஒரு பாடலுக்கு நடனமாடியது என்று...! நாங்களும் எஜுகேட்டேட் ஃபேமிலி என்று செந்தில் சொல்ல, நான் எஸ்எஸ்எல்சி டா என்று கவுண்டமணி டென்ஷனாகி கத்துவது...நான் ஏழாவது பாஸ்ண்ணே.. நீங்க எஸ்எஸ்எல்சி ஃபெயிலுண்ணே என்று செந்தில் சொல்வது.. கவுண்டர் டென்ஷஷனில் கோபப்படுவது என்று படம் தமாஷாக இருக்கும். இந்த படத்தை வெள்ளி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+