ஏப்ரல் 14 வேற வரப் போகுது.. தர்பார் படம் டிவியில் ரிலீஸாகுதாம்.. கூடவே டகால்டியும்..!
சென்னை: சன் டிவியில் ஏப்ரல் 14 அன்று ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அதாவது பொங்கல் தினத்தன்று வெளிவந்த தர்பார் படம், மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டகால்டி படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
லாக்டவுன் நேரத்திலும் போட்டியை கடைப்பிடிக்கும் டிவி சானல்களில் ஏப்ரல் 14 க்கு என்று இன்னும் என்ன போட்டி இருக்கப் போகிறதோ தெரியவில்லை.
எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இப்போதைக்கு சன் டிவி ஏப்ரல் 14 அன்று இரண்டு புத்தம்புது படங்கள் ஒளிபரப்புவதை மட்டும் ப்ரோமோ போட்டு வருகிறது.

போட்டாபோட்டியில் படங்கள்
சன் டிவிக்கு போட்டி என்று பார்த்தால் விஜய் டிவிதான் சன்னுக்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறது. சன் டிவி சீரியல்கள்... சீரியல்கள் என்று கொடுத்து, பெண்களுக்கு பிடித்த வகையில் எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்கு மாற்று என்று யோசித்த விஜய் டிவி அதிகப்படியான ரியாலிட்டி ஷோக்களை வழங்கி சன் டிவிக்கு போட்டியாக இருந்து வருகிறது.

சீரியல் ஆதிக்கம்
விஜய் டிவியும் பெண்களை ஈர்க்கும் விதமாக சீரியல்களை அதிகம் வழங்க ஆரம்பித்து, சனிக்கிழமை என்று சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்து இருந்தது. இந்த நேரத்தில்தான் கோவிட் 19 தொற்று லாக்டவுன் அமலில் வர, சன் டிவி தொடர்ந்து திரைப்படங்களை ஒளிபரப்பத் துவங்கியது.

போட்டியில் விஜய் டிவி
விஜய் டிவியும் சன் டிவியுடன் போட்டி போட்டுக்கொண்டு தினமும் மூன்று படங்கள் என்று அறிவித்து படங்களை ஒளிபரப்பி வருகிறது. அதோடு, விஜய் டிவியின் பழைய நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பும் செய்து வருகிறது. இதனால் சீரியல்கள் மறு ஒளிபரப்பு என்பது விஜய் டிவியில் இல்லை.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு என்று தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும். சன் டிவி மட்டும் டிவி துவங்கிய வருடத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும். இந்த ஆண்டும் அப்படி கொண்டாடும் வகையில் சன் டிவி தர்பார், டகால்டி இரண்டு படங்களை ஒளிபரப்ப ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.

மற்ற நிகழ்ச்சிகள் படங்கள்
சன் டிவி ஏப்ரல் 14 க்கான மற்ற சிறப்பு படங்கள், நிகழ்ச்சிகள் என்று இன்னும் அறிவிக்காத நிலையில், போட்டியான விஜய் டிவி என்ன படத்தை ஒளிபரப்ப இருக்கிறதோ தெரியவில்லை. எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications