கொரோனாவால் இப்படி ஆயிப் போச்சே.. சன் டிவியில் வெள்ளி புது பட கொண்டாட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் தியேட்டர்களில் புதுப்படங்கள் வெளியாகும். கொவிட் 19 தொற்றால் லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் தியேட்டர்கள் ஒன்று கூட இல்லை...புதுப் படங்களும் இல்லை.

இந்த நேரத்தில்தான் உலகத் தொலைக் காட்சிகளில் முதன் முறையாக என்று சன் டிவி வெள்ளிக் கிழமைகளில் புது படங்களை ஒளிபரப்ப உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 24ம் தேதி வரை வெள்ளி புதுப்பட கொண்டாட்டமாக ஒளிபரப்ப இருக்கும் படங்களை சன் டிவி அறிவித்து உள்ளது.

புதுப்படங்கள் ஒளிபரப்பு என்பது தொலைக்காட்சிகளில் அரிதாகிப் போன நிலையில், சன் டிவி மீண்டும் புதுப்படங்கள் ஒளிபரப்புவதை துவங்கி இருக்கிறது.

மார்ச் பிப்ரவரி

மார்ச் பிப்ரவரி

கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் வெளியான மூன்று புத்தம் புது படங்களின் ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது சன் டிவி. எப்போதும் நாள் கிழமைகளில்... அல்லது சிறப்பு ஞாயிற்று கிழமைகளில் உலகத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக என்று புத்தம்புது படங்களை ஒளிபரப்பி வந்த சன் டிவி...இப்போது வெள்ளி புது பட கொண்டாட்டம் என்று துவங்கி இருக்கிறது.

நாடோடிகள் 2

நாடோடிகள் 2

வருகிற வெள்ளிக்கிழமை வெள்ளி புதுப்பட கொண்டாட்டமாக நாடோடிகள் 2 படத்தை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது. இதன் முதல் பாகம் நாடோடிகள் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்று சொல்லக்கூடிய நிலையில், நாடோடிகள் 2 எதிர்பார்த்த அளவு என்றில்லாவிட்டாலும், எதிர்பாராத பிளாப் என்றுதான் சொல்ல வேண்டும். அதுல்யா ரவி, அஞ்சலி இவர்களுடன் சசிகுமார் நடித்து இருக்கும் இந்த புத்தம் புது படம் சன் டிவியில் வெள்ளி புதுப்பட கொண்டாட்டத்தில்.

சுந்தர் சியின் இருட்டு

சுந்தர் சியின் இருட்டு

சுந்தர் சி, யோகிபாபு நடிப்பில் வெளியான இருட்டு காமெடி கலந்த திகில் படமும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான புத்தம் புது படம்தான். யோகிபாபுவின் காமெடியை நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நாயகிகளாக நடிகைகள் தன்ஷிகா, விமலா ராமன் நடித்து உள்ளனர். சுந்தர் சி மிக நன்றாக நடித்து இருப்பதாக விமர்சனங்கள் தெரிவித்து இருந்தன.

அடுத்த சாட்டை

அடுத்த சாட்டை

அடுத்த சாட்டை...இதுவும் அண்மையில் வெளியான படம்தான் என்றாலும், சாட்டை போல பேர் சொல்லவில்லை. ஏன் அடுத்த சாட்டை என்று ஒரு படம் வந்ததா என்று பேரே கூட கேள்விப்படாத அளவில்தான் படத்திற்கான வரேவேற்பும் இருந்தது.சமுத்திரக்கனி அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடித்து இருக்கும் இந்த படம் சன் டிவியில் வருகிற 24ம் தேதி வெள்ளி புது பட கொண்டாட்டத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+