மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் “ராமாயணம்”.. ப்ரோமோ வெளியீடு!
சென்னை: இராமாணம் இதிகாசத் தொடர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது சன் டிவி.
வாலிமீகியால் படைக்கப்பட்ட இதிகாசமான 'இராமாயணம்' உலகெங்கிலும் பெரும் புகழ் பெற்றது. வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் தனது கற்பனைகளை இணைத்து இதனைத் தமிழில் கம்ப இராமாயணமாக இயற்றினார்.

கோசல நாட்டின் தலைநகரமான அயோத்தியை சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவரது மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி விவரிக்கும் "இராமாயணம்" உறவுகளுக்கு இடையேயான கடமை, வாழ்வியல், போர் முறைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் காட்டும் காவியமாக பலராலும் போற்றப்படுகிறது.
நூலாகவும், செவிவழிக் கதையாகவும், வெகுமக்கள் பரப்பை எட்டிய ராமாயணம், தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட இராமாயணம் தொடருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.
தொலைக்காட்சி தொடர்கள் வாயிலாக இராமாயணம் இந்தியாவில் வசிக்கும் மக்களோடு மட்டும் நிற்காமல், உலக அளவில் சென்றது. மக்கள் எத்தனை முறை ராமாயணம் இதிகாசக் கதைகளைக் கேட்டிருந்தாலும், டிவியில் தொடரை பார்த்தாலும், ஒவ்வொரு முறை மீண்டும் ஒளிபரப்பாகும் போதும் ஆர்வத்தோடு பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழின் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் "இராமாயணம்" மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. "சீதையின் இதயநாயகன்.. இராமாயணம்.. விரைவில்" எனக் குறிப்பிட்டு ப்ரொமோ வீடியோ சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் திறப்பு விழா கண்ட நிலையில், ராமர் பற்றிய பேச்சுகள் புழக்கத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மீண்டும் 'இராமாயணம்' இதிகாசத் தொடரை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் தொலைக்காட்சி.
முன்பு சன் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 'ராமாயணம்’ ஒளிபரப்பானது. இந்நிலையில், தற்போது ஒளிபரப்பாக உள்ள ராமாயணம் அதேதானா? அல்லது மீண்டும் எடுக்கப்பட்டதா என்பது அறிவிக்கப்படவில்லை.
மேலும், “இராமாயணம்” தொடர் எந்தெந்த நாட்களில் ஒளிபரப்பாகும், எப்போது முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது என்ற தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications