சன் டிவி ட்விட்டரை தொறந்தா ஒரே நொய்யி நொய்யின்னு... பூராம் பழசு...!
சென்னை: தொலைக்காட்சி சானல்கள் தங்களுக்கு என்று ட்விட்டர் வலைத் தளத்தை மெயின்டெயின் செய்து வருகின்றன. இதில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள் சீரியல்கள், குறித்த விஷயங்களை அப்டேட் செய்வதுதான் வழக்கம்.
விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் ஒளிபரப்பாகப் போகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள், குறித்த அப்டேஸ்ட்ஸ் இருக்கும். ஜீ தமிழ்,கலர்ஸ் தமிழ் டிவியிலும் அப்படித்தான். ஆனால், சன் தொலைக்காட்சியின் ட்விட்டர் வலை பக்கத்தில் அப்படியான விஷயங்கள் இருக்காது.
படங்கள் மட்டும்தான் அன்றைய தினம் ஒளிபரப்பாக இருக்கும் படத்தின் காட்சி ப்ரோமோவாக இடம் பெற்று இருக்கும். போன வருஷம் நடந்து முடிஞ்ச தீபாவளி நிகழ்ச்சிகள் குறித்த ஒரு சீன்.. என்று மத்தது எல்லாம் பழசுதான் நொய்யி நொய்யின்னு பக்கம் முழுக்க இருக்கிறது.

மதுரை முத்து ஆதவன்
மதுரை முத்துவும், ஆதவனும் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பங்கேற்க சென்றுவிட்ட நிலையில், அவர்கள் சன் டிவியில் இருந்த போது நடத்திய காமெடி ஜங்க்ஷன் நிகழ்ச்சியை ஒவ்வொன்றாக ட்வீட்டர் பக்கத்தில் தினமும் பதிவிட்டு, சன் நெக்ஸ்ட் ஆப்பில் பாருங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இது பார்க்கவே போரடிக்குது.

எப்பவோ எடுத்த பேட்டிகள்
சன் டிவியில் முன்பெல்லாம் விஜய், அஜித் என்று பெரிய நடிகர்களை அடிக்கடி பேட்டி எடுத்து இருப்பார்கள். அதில் ஒரு கிளிப்பிங்ஸை பதிவிட்டு, சன் நெக்ஸ்ட் ஆப்பில் கண்டு களியுங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். என்னதான் விஜய் அஜித் பேட்டியாக இருக்கட்டுமே பழசை திரும்ப திரும்ப எத்தனை தடவைங்க பார்க்கறது?

முதல்நாள் முடிந்ததை
முதல் நாள் ஒளிபரப்பாகி முடிந்த நிகழ்ச்சியின் க்ளிப்பிங்ஸ் பதிவிட்டு, இதை முழுவதுமாக காண சன் நெக்ஸ்ட் ஆப் பதிவிறக்குங்கள் என்று ஒரு அறிவிப்பு வேறு. இதேபோன்று கடந்த வருடம் ஒளிபரப்பாகி வந்த லொள்ளுப்பா கவலையை தள்ளுப்பா நிகழ்ச்சியின் கிளிப்பிங்ஸ் என்று ஒரே அறந்த பழசுங்க...சீரியல் குழுவுக்கு என்று ஸ்லாட் ஒதுக்கித்த தர தெரிந்த சன் டிவிக்கு, ஒளிபரப்பாக இருக்கும் சீரியல்களின் ப்ரோமோக்களை ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட நேரமில்லை...ஆட்கள் இல்லை...

என்னங்க சன் நெட்வொர்க்?
என்னங்க சன் நெட்வொர்க்.. பெரிய நெட்வொர்க்ன்னு பேருதான். எப்போதுமே அறந்த பழசாவா ட்விட்டர்கள் பதிவு செய்வீங்க? ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகளின் க்ளிப்பிங்ஸ்.. சீரியல்கள் க்ளிப்பிங்ஸ்.. இதெல்லாம் அப்லோட் செய்ய மாட்டீங்களா? எப்போ பார்த்தாலும் பழசே பார்த்து பார்த்து, ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் எத்தனை வருஷமா ட்விட்டர் யூஸ் பண்ணாமயே இருக்காங்க இந்த சன் டிவின்னு நினைச்சுட போறாங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications