அம்மாடி! 17 புதிய சீரியல்கள் வரப்போகுதா? சன் டிவியில் மட்டுமே இத்தனை சீரியலா? இனி கொண்டாட்டம் தானே?
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் 17 சீரியல்கள் அடுத்தடுத்து வர இருக்கிறது. அது குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் எந்தெந்த சேனலில் எந்த சீரியல் வெளியாக போகிறது என்று பார்க்கலாம்.
அதில் சன் டிவியில் மட்டுமே பதினோரு சீரியல் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதில் முதலாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் மற்றும் ஆனந்த ராகம் போன்ற சீரியல்களை தயாரித்து வரும் ஆரா கிரியேஷன் சன் டிவியில் புதிய சீரியலை ப்ரொடக்ஷன் செய்யப் போகிறார்கள். அந்த சீரியலில் கதாநாயகனாக கண்ணான கண்ணே சீரியல் ராகுல் ரவி மற்றும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை கேப்ரில்லா இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்கள்.

அடுத்ததாக புன்னகை பூவே என்ற தலைப்போடு புது சீரியல் வர இருக்கிறது. இந்த சீரியலில் பலர் புது முகங்களாக நடிக்கிறார்கள். அதுபோல ப்ரொடக்ஷனும் ஐயன் மேக்கர்ஸ் என்ற புது முகங்கள் தான். இந்த சீரியலில் கதாநாயகனாக ஹர்ஷ் நாக்பால் என்ற நடிகர் நடிக்கிறார்.
அடுத்ததாக சன் டிவியில் நடிகர் "மிதுன் ராஜ்" நடிப்பில் புதிய சீரியல் வர இருக்கிறது இதற்கான ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. மிதுன் ராஜ் ஏற்கனவே பல சீரியல்களில் சப்போர்ட்டிங் ரோலிலும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதிலும் ஜீ தமிழில் "நினைத்தாலே இனிக்கும்" சீரியலில் இவர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுபோல அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஒருவர் தமிழில் அறிமுகமாகிறார்.
நாலாவது சீரியலை சுந்தரி சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலை ப்ரொடியூஸ் செய்து வரும் மிராக்கிள் மீடியா இந்த சீரியலை ப்ரொடியூஸ் செய்கிறார்கள். இந்த சீரியலுக்கான தலைப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிகர் "சந்தோஷ்" கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் சந்தோஷ் ஏற்கனவே கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பருகி வரும் இதயம் சீரியலில் கதாநாயகனின் பிரண்டாக நடித்திருக்கிறார்.
அடுத்ததாக ஐந்தாவது சீரியலை பாண்டவர் இல்லம் சீரியலை ப்ரொடக்ஷன் செய்த விசாகா ப்ரொடக்ஷன் தான் ப்ரொடியூஸ் செய்கிறார்கள். இந்த சீரியலில் கதாநாயகனாக "விக்கி ரோஷன்" நடிக்கிறார். அவர் சமீபத்தில் பிரியமான தோழி என்ற சீரியலிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு டைட்டில் "கலாட்டா கல்யாணம்" என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறாவதாக சரிகம புரொடக்ஷனில் ஒரு சீரியல் வர இருக்கிறது. இந்த சீரியலில் நடிகர் சல்மான் நடிகை டெல்னா மற்றும் அக்ஷயா நடிக்கிறார்கள். இதில் நடிகர் சல்மா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த மௌனராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் தான். அதுபோல நடிகை டெல்னா அன்பே வா சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அக்ஷயாவும் ரோஜா சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் புது சீரியல் வர இருக்கிறது.
அடுத்ததாக ஏழாவது இடத்தில் சரிகம புரடக்ஷனில் மற்றொரு சீரியலும் புதியதாக வர இருக்கிறது. இந்த சீரியலுக்கு மல்லி என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீரியலில் பல பிரபலங்கள் இருக்கின்றனர். அதில் நடிகை நளினி, நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், அது போல நடிகர் மதன் பாபு மற்றும் பேரன்பு சீரியல் கதாநாயகன் இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
அடுத்ததாக எட்டாவது இடத்தில் அனாமிகா சீரியல் வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோ சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது. இந்த சீரியல் திகில் கலந்த சீரியலாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிகர் ஆகாஷ் மற்றும் தர்ஷத் ஆகியோர் கமிட்டாகி இருக்கிறார்கள். இதில் தர்ஷத் சிங்கப்பனே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஆகாஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலும் விரைவில் வெளியாக இருக்கிறது.
அடுத்ததாக ஒன்பதாவது இடத்தில் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் புது சீரியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆடிஷன் முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் இதற்கான அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக பத்தாவது இடத்தில் மெட்டி ஒலி சீசன் 2 சீரியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீரியல் கடந்த வருடத்திலேயே இரண்டாவது பாகம் தொடங்கப் போகிறது என்ற செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் அதில் நடித்திருந்த நடிகைகள் சமீபத்தில் ரீ யூனியன் செய்திருந்த நிலையில் இதற்கான அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 11 வது இடத்தில் சமீபத்தில் நடிகர் சஞ்சய் மற்றும் சுருதி நடிப்பில் வெளியாகி இருக்கும் லட்சுமி என்ற சீரியலில் புரொடக்ஷனில் மற்றொரு சீரியல் தொடங்க இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ப்ரொடக்ஷன் கண்ணான கண்ணே சீரியலை ப்ரொடக்ஷன் செய்தவர்கள் தான். அதனால் அந்த சீரியல் நடிகையே மீண்டும் இதில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக சன் டிவியில் இன்னும் 11 சீரியல்கள் வர இருக்கிறது. மீதமுள்ள ஆறு சீரியல்கள் மற்ற சேனல்களில் வெளியாக இருக்கிறது. அது குறித்து அடுத்த அப்டேட்டில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications