சன் டிவியில் புதன் முதல் ஞாயிறு வரை பொங்கல் கொண்டாட்டம்!
சென்னை: எப்போதும் இல்லாத வகையில் சன் டிவியில் கடந்த புதன் முதல் ஞாயிறு வரை பொங்கல் கொண்டாட்டம் என்று நிகழ்ச்சிகள், படங்களை வழங்கி வருகிறது சன் டிவி.
வழக்கமாக சன் டிவி வாரத்தின் வேலை நாள் என்றால் காணும் பொங்கல் அன்று மாலையோடு பொங்கல் விழாவை முடித்து விட்டு, இரவில் வழக்கம் போல சீரியல்கள் ஒளிபரப்பத் துவங்கி விடும்.
மற்ற சானல்கள் இது போல வழக்கமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கி உள்ளன. அனால்,சன் டிவி பொங்கல் விழாவை பொங்கல் முடிந்தும் விடுமுறையில் கொண்டாடி வருகிறது.

விஜய் டிவி
விஜய் டிவி பொங்கல் மற்றும் பொங்கல் இரண்டு தினங்கள் மட்டுமே பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியது. இரண்டு நாட்களுக்கு காலை மாலை என்று படங்கள், நிகழ்ச்சிகள் என்று வழங்கியது. மற்ற நேரங்களில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியது. காணும் பொங்கலில் விஜய் டிவியின் சீரியல்கள் வரிசை கட்ட ஆரம்பித்து விட்டன.

ஜீ தமிழ் டிவி
ஜீ தமிழ் டிவி பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் இரண்டு நாட்கள் படங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று வழங்கி, காணும் பொங்கல் அன்று வழக்கம் போல சீரியல்களை ஒளிபரப்பத் துவங்கி விட்டது.ஜீ தமிழ் டிவியின் மாலை நேர சீரியல்களுக்கு பிரேக் ஃப்ரீ விளம்பரங்கள் என்று கூட விளம்பரம் செய்யலாம். ஓரிரு சீரியல்களுக்கு ஹோம் விளம்பரம் தவிர மற்ற விளம்பரங்கள் இல்லவே இல்லை.

ஜெயா டிவி
ஜெயா டிவியும் பொங்கல், மாட்டு பொங்கல் இரு தினங்களுக்கு மட்டுமே பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி, பொங்கல் சிறப்பு படங்கள் என்று ஓளிபரப்பியது. மற்ற நாட்களில் வழக்கம் போல சீரியல் ஒளிபரப்புவது போலவே காணும் பொங்கல் தினத்திலும் தனது பணியை துவங்கியது.

5 நாள் 5 படங்கள்
சன் டிவி மட்டும் பொங்கலுக்கு 5 நாள் 5 படங்கள் என்று அறிவித்தது போல, 5 நாட்கள் பொங்கல் சிறப்பு படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அறிவித்து விடுமுறை தினங்களை பொங்கல் பண்டிகை தினம் என்று கொண்டாடி வருகிறது. இன்றும் காலை தோழா படம், காலையில் ராதிகா,சரத்குமார் பங்கேற்ற நட்சத்திர ஜோடி சிறப்பு நிகழ்ச்சி, மதியம் ராசாத்தி பொங்கல் கொண்டாட்டம், மதியம் கொடி படம் என்று ஒளிபரப்பி வருகிறது.
இன்று மாலை விஸ்வாசம் படம், நாளை மாலை பேட்ட படம் என்று பட்டையை கிளப்புகிறது சன் டிவி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications