குஷ்புவுக்கு ஒரு பிரச்சினை வந்தப்ப! பக்கபலமாக இருந்தது ஜெயலலிதாதான்! சுந்தர் சி உருக்கம்
சென்னை: நடிகை குஷ்புவின் சர்ச்சைக்குரிய பிரச்சினையை தீர்த்து வைத்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என இயக்குநரும் குஷ்புவின் கணவருமான சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
1980களின் இறுதியில் வந்தாலும் அந்த ஆண்டு கால நடிகர், நடிகைகளை போல் குஷ்பு கனவுக் கன்னியாக வலம் வந்தார். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.

குஷ்பு தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள், இந்தியிலும் நடித்துள்ளார். அவர் முறைமாமன் படத்தில் நடித்த போது இயக்குநர் சுந்தர் சியுடன் காதல் வயப்பட்டு இருவரும் 5 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். குஷ்புவுக்காக ரசிகர்கள் கோயில் கட்டினர் என்றால் எந்த அளவுக்கு அவரை மக்கள் நேசித்திருப்பார்கள் என்பதை எண்ணி பாருங்கள். அது மட்டுமல்ல தென்னிந்தியர்களின் முக்கிய உணவான இட்லிக்கு குஷ்பு இட்லி என பெயர் வைத்தனர். சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட பிறகு குஷ்பு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
அவருடைய சொந்த தயாரிப்பில் சில சீரியல்களை இயக்கினார். அதிலும் குஷ்பு நடிக்கவும் செய்தார். நடிப்பு, தயாரிப்பு என இருந்த நிலையில் அரசியலுக்கும் வந்தார். முதலில் திமுகவில் இருந்த குஷ்பு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். பிறகு அங்கிருந்து பாஜகவில் தாவி தற்போது பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
அத்துடன் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் குஷ்பு உள்ளார். இந்த நிலையில் குஷ்புவின் கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் சுந்தர் சி ஒரு சேனலுக்கு பேட்டியில் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் குஷ்புவும் சுந்தரும் 2 பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என விரும்பினராம். அதே போல் இரு தேவதைகளை எங்களுக்கு கொடுத்துவிட்டதாக சுந்தர் சி தெரிவித்தார்.
மேலும் சுந்தர் சி கூறுகையில், குஷ்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பு குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவர் கூறிய கருத்து திரித்து வெளியிடப்பட்டுவிட்டது. அதாவது தமிழக பெண்களுக்கு கற்பு தேவையில்லை என்பதை போல் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் மிகப் பெரிய சர்ச்சை எழுந்தது.
அப்போது குஷ்புவுக்கு ஒட்டுமொத்த பெண்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவரை கண்டித்து ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. குஷ்புவை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து குஷ்பு வீடியோவில் தோன்றி மன்னிப்பு கேட்டார்.
அவர் மன்னிப்பு கேட்டதன் பின்னணியில் இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். குஷ்புவுக்கு எதிராக கிளம்பிய பூகம்பத்திற்கு நான் பக்க துணையாக இருந்தேன். அந்த நேரத்தில் நானும் அவரும் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம். அப்போது ஜெயலலிதாதான் எங்களுக்கு ஆறுதல் தெரிவித்து. இந்த பிரச்சினை அரசியல் பிரச்சினையாக மாறுகிறது. எனவே குஷ்புவை ஒரு மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என கூறினார். அது போல் குஷ்புவும் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, எனினும் நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் என்னை மன்னித்துவிடுங்கள் என்றார். அதன் பிறகு அந்த பிரச்சினை அடங்கியது. இவ்வாறு சுந்தர் சி பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications