Sundari neeyum sundaran naanum: என்னங்கடா நடக்குது இங்கே..இப்படி எல்லாமாடா பேசுவீங்க.. வெளங்கிரும்டா
சென்னை: வர வர புரமோக்களைப் பார்க்காமல் நேரடியாக புரோகிராமுக்கே போய்டலாம் போல. அந்த அளவுக்கு டெரரா இருக்கு இல்லாட்டி காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு இருக்கு. அதுவும் இல்லாவிட்டால் கண் அவிஞ்சு போய்டும் போல. அப்டி இருக்கு.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக அதிரடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாகவுள்ள எபிசோடுக்குரிய புரோமோவை பார்க்க நேர்ந்தது. சற்று இதயமே நின்றது போலாகி விட்டது. காரணம், அதில் வரும் வசனங்கள் அப்படி.

திட்டித் தீர்த்து
நாயகனும், நாயகியும் அப்படி ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டித் தீர்த்துக் கொள்கிறார்கள். குழந்தை குட்டிகளுடன் இந்த சீரியலை பார்ப்போர் இந்த காட்சிகள் வரும் போது காதுகளை .. அதாவது குட்டீஸ்களின் காதுகளை கப்பென்று அடைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

பழைய சோறு
அப்படி என்னதாங்க பேசிக்கிறாங்க. அவ சொல்றா புளிச்சகீரைன்னு... இவன் சொல்றான் பழைய சோறுன்னு. அதுக்கு அவ மொள்ள மாரின்னு சொல்ல. இவன் முடிச்சவிக்கின்னு கோபப்பட.. நீ நாசமாப் போய்ருவனுக்கு பதிலுக்கு எகிற. வெளங்க மாட்டேன்னு அந்தம்மா சொல்ல.. அப்படியே தெள்ளவாரி, தகரடப்பா, தயிர் டப்பான்னு லிஸ்ட் பெருசாகிட்டே போகுது.

சீரியலில் டீச்சர்
சீரியலில் டீச்சர், பசங்க படிக்கறதுக்காக போராடறதும், இந்த அழகு டீச்சர் மீது நடிகை லதா ஒரு கண் வைப்பதும், இவள் மாதிரி ஒரு பெண் தன் வீட்டுக்கு மருமகளா வந்தால்நன்றாக இருக்கும்னு பேசிக்கறதும் கொஞ்சம் பார்க்காத தவெல்லாம் ரகம். கதாநாயகி டீச்சர் ரொம்பஅழகா இருக்காங்க.பசங்கபடிப்பதற்கு ஊரார் எந்த தொல்லை கொடுத்தாலும்,அதை சமாளிக்கும் விதம் அருமை.
|
வார்த்தைகளைக் கத்து
ஏண்டாப்பா.. குடும்பத்தோடு பார்க்கிறவங்களுக்கு இப்படித்தான் நல்ல நல்ல வார்த்தைகளைக் கத்துத் தருவீங்களா..நல்லதா நாலு வார்த்தை பேசப்படாதா.. ஏண்டாப்பா இப்படி உயிரை வாங்கறீங்க.. என்னமோ போங்கடா.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications