உடம்பாலும், மனதாலும் அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. பிறந்தநாளில் எமோஷனலான சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கேப்ரில்லா செல்லஸ் தன்னுடைய பிறந்தநாளில் முதியோர் இல்லத்திற்கு சென்று வயதில் மூத்தவர்களிடம் ஆசி வாங்கிக்கொண்டு தன்னுடைய கடந்த கால கஷ்டங்கள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் அதிகமாக அடுத்த மாநில நடிகைகள் தான் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இயக்குனர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோருமே அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலர்தான் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பல நடிகைகள் பல்வேறு திறமைகளோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில நடிகைகள் தங்களுடைய நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் கவிதை படிப்போமா? என்று கதை, கவிதை படித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அந்த நிலையில் தான் அவருக்கு சன் டிவியில் தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் ஆரம்பத்திலேயே இவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு மக்களுக்கு தொடங்கிவிட்டது.
ஆனாலும் இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே போட்டியிலிருந்து விலகி இருந்தார். அதற்கு பிறகு தான் சினிமா மற்றும் சீரியலின் வாய்ப்புக்காக அதிகமாக முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் கேப்ரில்லாவிற்கு சுந்தரி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டு மற்றும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
சிவப்பாக அழகாக இருந்தால்தான் வாய்ப்பு என்று இல்லை என்று கருப்பு நிறமும் அழகுதான் என்று இவருடைய நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சுந்தரி சீரியலில் படிக்காத பெண்ணாக இருந்த கேபி தன்னுடைய சொந்த உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் படித்து கலெக்டர் ஆகி இருக்கிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் கடந்த மாதத்தில் தன்னை போல சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுப்பதற்காக "சினிமா பேட்டரி தியேட்டர்" ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதற்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் கேப்ரில்லாவை பாராட்டி வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/C7EArEoxJTF/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
இந்த நிலையில் நேற்று அவருடைய பிறந்தநாள். அதனால் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக முதியோர் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு இருந்த முதியோர்கள் பலர் கேப்ரில்லாவை பார்த்ததும் சந்தோஷமாக அவரோடு ஆடிப்பாடி தங்களுடைய மகிழ்ச்சிகளை கொண்டாடி இருக்கிறார்கள். அதுபோல கேப்ரில்லா தன்னுடைய கையாலே அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி இருக்கிறார்.
பிறகு எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கி இருக்கிறார். இந்த வீடியோவை கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு கேப்ஷன் ஒன்று கொடுத்திருக்கிறார். "அதில் போன வருஷம் இந்த நாள் உடம்பாலும் மனதாலும் கஷ்டப்பட்டேன்... இப்போ சொல்றேன் யாவும் கடந்து போகும். நமக்காக உண்மையா இருக்கிற மனிதர்கள் கூட இருந்தா..
அன்பு கொட்டி கொடுத்த என்னுடைய பாட்டி தாத்தாவுக்கும் அனைவருக்கும் நன்றி" என்று அந்த வீடியோவை கேப்ரில்லா பகிர்ந்து இருக்கும் நிலையில் அவருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications