Sunday doubles programme: அடடே... ஞாயிறு பேக் டு பேக் தளபதி...ஞாயிறு டபுள்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வியாபார தந்திரம் என்றால் சன் டிவியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். சன் டிவியில் ஒவ்வொன்றும் கால்குலேஷனில்தான் நிர்வாகத்தினரால் பார்க்கப்படுகிறது,

செய்திகளில் மட்டும் ஒருவேளை பாரபட்சம் காண்பிப்பார்கள்.ஆனால், நிகழ்ச்சிகளில் ரேட்டிங் இல்லை என்றால், தயவு தாட்சண்யம் இன்றி, அடுத்த நாளே கூட அதை நிறுத்தி விடுவார்கள்.

வியாபாரம் வேறு, சொந்த பந்த விவகாரம் வேறு என்று யுத்தியை கையாண்டு, எப்போதும் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் சன் டிவிக்கு நிகர் சன் டிவிதான்.

பிக் பாஸ் சீசன்

பிக் பாஸ் சீசன்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் துவங்கிய நேரத்தில், தங்களது வியூவ்ர்ஸை அந்த சேனல் பக்கம் திரும்ப விடாமல் பார்த்துக்க புதுப் படங்களை சனி, ஞாயிறு கிழமைகளில் போட்டுத் தாக்கி வருகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்களது வியூவர்ஸ் எப்போதும் சீரியல்களில் கவனம் செலுத்தி வருவார்கள்.அது தெரிந்த சன் டிவி, சனி, ஞாயிறு கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்சசியைத் தொகுத்து வழங்கும் நாட்களை மட்டும் நினைத்து இப்படி புதுப் படங்களை ஒளிபரப்பி வருகிறது.

ஞாயிறு டபுள்ஸ்

ஞாயிறு டபுள்ஸ்

படம் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்கு சண்டே டபுள்ஸ் என்று வேறு பெயர் வைத்தது. புது புது படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு, மக்களை ஈர்த்து இன்னும் தனது இடத்தை, ரேட்டிங்கை தக்க வைத்து இருக்கிறது சன் டிவி. சண்டே டபுள்ஸ் நிகழ்ச்சியில் இரண்டு புது படங்கள் ஒளிபரப்ப கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை மீட்டிங் மீட்டிங் என்று போட்டு பிளான் செய்தார்கள் என பேச்சு அடிபடுகிறது.

சண்டே டபுள்ஸ்

சண்டே டபுள்ஸ்

சரி புது படங்கள் ஒளிபரப்பத்தான் சண்டே டபுள்ஸ் என்று சொல்கிறார்கள் என்றால், இந்த வாரம் கில்லி படமும் , பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவையும் அடுத்தடுத்து ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கும் சண்டே டபுள்ஸ் என்று பெயரிலேயே ப்ரோமோ போட்டு வருகிறார்கள்.

விளையாட்டில் தொடர்பு

விளையாட்டில் தொடர்பு

கில்லி, பிகில் இரண்டுமே விளையாட்டு தொடர்பான படங்கள்.கில்லி கபடி விளையாட்டை மையமாக வச்சு, வசூலை வாரிக் குவித்த படம். அடுத்து அட்லி இயக்கத்தில் வெளிவர இருக்கும் பிகில் படம், கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கி உள்ள படம்., இந்த ஒற்றுமையை வைத்தும் புகுந்து விளையாடி இருக்கும் சன் டிவி,வரும் ஞாயிறு டபுள்ஸ் என்று தளபதி விஜயை மையமாக வைத்து ப்ரோமோ வெளியிட்டு, மக்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+