1 நம்பர் அடிமை.. மணிகண்டன் மண்டையில் எதையும் ஏத்திடாதீங்க.. சபாஷ் வெற்றி தந்த சக்சஸ் நடிகர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசிஸ்டென்ட்களை இப்படி மோசமாக நடத்தும் டைரக்டர்கள் இன்னமும் சிலர் இருக்கத்தான் செய்றாங்க.. ஆனால், இப்போது காலம் மாறி போச்சு என்று அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை" என்று அந்தணன் கூறியிருக்கிறார்.. அத்துடன் நடிகர் மணிகண்டனையும் பாராட்டி இருக்கிறார்.

The Whistle என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மணிகண்டன் நல்லா நடிக்கிறார்.. தமிழ் சினிமாவில் அடுத்த முகம் மணிகண்டன்தான் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.. இப்படி ஏதாவது அவர் மண்டையில் ஏத்தி, அவரையும் மற்றவர் போல தயவுசெய்து ஆக்கிடாதீங்க..

television manikandan kudumbasthan

தனிப்பட்ட முறையில், இயல்பாகவும், எளிமையாகவும, இத்தனை வெற்றிகளையும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமலும் மணிகண்டன் இருக்காரு. அவர் இப்படியே தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. உங்களை மாதிரி உண்டா? என்று சொல்லி சொல்லியே, என்று நல்லா இருக்கிறவங்களையும் கெடுத்திடுவாங்க.. ஒருகட்டத்தில் அவர்களையே நம்புற அளவுக்கு கொண்டுவந்திடுவாங்க.. ஆனால், ஒன்னுமில்லாமல் போய்ட்டால், ஒரு பயலும் கிட்ட வர மாட்டாங்க.

அறிவுரை: மணிகண்டன் அடிபட்டு, மிதிபட்டு, ஒவ்வொருத்தருகிட்டயும் அவமானப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அதனால் அவருக்கு எது நிஜம், எது போலி என்று நல்லாவே தெரியும்.. எதையுமே மண்டையில் ஏத்திக்காம, கேஷூவலா போயிட்டிருக்காரு..
"குடும்பஸ்தன்" படம் பார்த்துட்டு வியந்தேன்.. அடிப்படையில் அவர் ஒரு ஸ்கிரிப்ட் டைரக்டர் என்பதால், அந்த கேரக்டரை உள்வாங்கி நடித்திருக்காரு.. இப்படியெல்லாம் கேரக்டர்களில் நடிக்க இன்றைக்கு ஆளே இல்லை. 500 பேரை தூக்கி போட்டு மிதிக்கணும்னு ஆக்‌ஷன் ஹீரோவாக செய்யணும்னுதான் நினைக்கிறாங்க.. அப்படியே யாராவது இதுபோன்ற கதைகளை எழுதினாலும், சின்ன நடிகர்கள் யாராவது அதில் நடித்து, அப்படியொரு படமே யாருக்கும் தெரியாமல் வந்துபோயிடுது

புது தெம்பு: எனவே, மணிகண்டன் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது, இதுபோன்ற கதைகளை எழுதுவோருக்கு புது தெம்பையும், புது நம்பிக்கையையும் தந்துள்ளது.. எனவே, இதை யாரும் கெடுத்துடக்கூடாது. மணிகண்டன் நினைத்தால் பென்ஸ் காரில்கூட இன்று வரலாம். ஆனால், அவர் பைக்கில் பழைய மாதிரியே வர்றாரு, போறாரு.. அவர் இன்னமும் மாறல. எளிய வீட்டில் இருந்து வந்து, இப்படி பெரிய இடத்தை பிடிப்பது சந்தோஷமான விஷயம்.

டைரக்டர் ஒருவரிடம் மணிகண்டன் அசிஸ்டென்ட்டாக பணியாற்றியபோது, "அடிமை 1" என்று தன்னுடைய பெயரை அவரது செல்போனில் சேவ் செய்து வைத்திருந்ததாக கூறியிருந்தார்..

யார் அவர்: அந்த டைரக்டர் யார் என்பதை, என்னுடைய சேனலில் சொல்லியிருக்கிறேன்.. அவர் இப்போது மனம் வருந்திவிட்டார். அதனால் அவரது பெயரை இப்போது சொல்வது சரியில்லை. ஆனால், அசிஸ்டென்ட்களை இப்படி மோசமாக நடத்தும் டைரக்டர்கள் இன்னமும் சிலர் இருக்கத்தான் செய்றாங்க.. காலம் மாறி போச்சு என்று அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை" என்றெல்லாம பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+