Pandian Stores Serial: கதிருக்கும் முல்லைக்கும் கெமிஸ்ட்ரி அள்ளுதே...!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிரின் கெமிஸ்ட்ரி இப்படி அள்ளுது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ரொமான்ஸெல்லாம் இல்லைங்க.
ஆனால், விரசம் இல்லாம ரசிக்கற மாதிரி எடுத்து இருக்காங்க... பாராட்டலாம்.

கருத்து வேறுபாடு
கதிராக நடிக்கும் குமரன், முல்லையாக நடிக்கும் சித்ரா இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு என்று பேசிப் பேசி எழுதி எழுதி ஓய்ந்தார்கள். ஆனால், இருவருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் என்னவோ பெருகிக் கொண்டுதான் இருந்தார்கள்.

முதலுக்கே மோசம்
ஆனால், இவர்கள் இருவருக்குள்ளும் விரிசல் அதிகமாவது போல தோன்ற, முதலுக்கே மோசம் வந்துவிடும் அபாயம் சீரியல் எடுப்பவர்களுக்கு. இருவரும் ராசியாகப் போனால்தான் உண்டு என்கிற நிலைமை. உடனே இருவரும் சமாதானம் ஆகி வெறும் கருத்து வேறுபாடுதான்.. சமாதானம் ஆகிவிட்டோம் என்று ஒன்றாகப் பேசி வீடியோ விட்டார்கள்.

இப்போது அள்ளுது
என்னதான் கருத்து வேறுபாடு இருந்த போதும் கூட நடிக்க வேண்டிய காட்சிகளில் இருவரும் குறை ஒன்றும் வைக்காமல்தான் நடித்து கொடுத்து வந்தார்கள். கதைப்படி இருவருக்குமான ரொமான்ஸ்தான் சீரியல் ஆர்வலர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்து வருகிறது.

கண்ணால் பேசுவதும்
காட்சிகளில் இருவரும் கண்ணால் பேசிக்கொள்வதும்... அவன் அதிராமல் முல்லை என்று கூப்பிட்டால், அவசரமாக ஓடோடி வந்து என்ன என்று ஆச்சரிய படுத்துவது போல கேட்பதும் பார்ப்பவர்களுக்கு குஷியாக இருக்கிறது.

தோளில் தூசி
முல்லை தோளில் படிந்து இருக்கும் தூசியை எடுக்க இவன் கையை அருகே கொண்டு போக, அவன் என்ன செய்யப் போகிறானோ என்று கண்களை மூடி சிலிர்க்க.. இவன் வெறும் தூசியை எடுக்கிறான். அவள் ஏதோ பேச வந்து டீ தரவா என்று கேட்டுவிட, எப்போதும் டீ மட்டும்தானா எனக்கு பிடிக்கும் என்று இவன் சலித்துக் கொள்கிறான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications