அள்ள அள்ள குறையாத 90ஸ் சூப்பர் ஹிட் படங்கள்.. இந்த வாரமும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் கடந்த வாரம் முழுவதும் 90ஸ் சூப்பர் ஹிட் படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இவ்வளவுதானா 90ஸ் சூப்பர் ஹிட் படங்கள் என்று கேட்பதற்கு முன்னரே சன் டிவி இந்த வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 9:30 மணிக்கு 90ஸ் சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்ப உள்ளது.

கடந்த வாரம் 90ஸ் சூப்பர் ஹிட் படங்களில் அஜித், விஜய் போன்ற இளையவர்கள் படங்களோடு, கேப்டன் விஜயகாந்த் படமும் ஒளிபரப்பாகியது. இரவானாலும் இப்படியான வரிசையில் படங்களை ஒளிபரப்பு செய்தால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு சன் டிவி 60ஸ் சூப்பர் ஹிட், 80ஸ் சூப்பர் ஹிட், 90ஸ் சூப்பர் ஹிட் என்று படங்களை வரிசைப்படுத்தி ஒளிபரப்பு செய்து வருகிறது. திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது நல்ல திரைப்பட விருந்தாகத்தான் இருக்கிறது.

சட்டை மேலே எவ்ளோ பட்டன்

சட்டை மேலே எவ்ளோ பட்டன்

வரும் திங்கள் கிழமை இரவு 9:30 மணிக்கு கமல்ஹாசன், குஷ்பூ நடிப்பில் வெளியான சிங்காரவேலன் படத்தை ஒளிபரப்பு செய்ய உள்ளது. சட்டை மேலே எவ்ளோ பட்டன் என்று வடிவேலு குஷ்பூவின் உடையை பார்த்து கூறும் காமெடி...மனோ யாரு வந்து இருக்கா பாரு கருவாடு வந்து இருக்குன்னு சொல்ற கவுண்டமணி காமெடி...கூவம் பக்கம் மட்டும் போயிடாத.. நாத்தம் அதிகமா இருக்குமாம் என்று கருவாட்டு கூடையுடன் ஆட்டோவில் வரும் கமல் பேசுவது என்று பல காமெடிகள் ரசிக்கும்படி இருக்கும்.

குஷ்பூ குஷ்பூ

குஷ்பூ குஷ்பூ

90ஸ் படங்களில் பெரும்பாலும் குஷ்பூ இல்லாத படங்கள் ஒரு சில படங்கள்தான் இருக்கும். தமிழகம் எங்கும் குஷ்பூ அலை வீசிய காலம். குஷ்பூவுக்கு கோயில் கட்டலாமா என்று ரசிகர்கள் தீவிரமாக யோசித்த காலமும் இதுதான். அந்த வரிசையில்... குஷ்பூ நடித்த வெற்றிப்பட வரிசையில் சத்யராஜுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்த ரிக்ஷா மாமா படமும் அடங்கும். செவ்வாய் கிழமை இரவு இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

புழு சாப்பிடும் நக்மா

புழு சாப்பிடும் நக்மா

பிரமாண்ட இயக்குநர் சங்கரின் காதலன் படம்.. பிரபுதேவாவை சூப்பர் ஹிட் ஹுரோவாக அடையாளம் காட்டிய படம். காதல் வேகத்தில் காதலன் பிரிவின் போது, சாப்பிடு சாப்பிடு என்று அம்மா கட்டாயப்படுத்த,. புழுவைப் பிடித்து சாப்பிடுவார் நக்மா. இதை பார்த்த அம்மாவே வயிற்று குமட்டல் தாங்க முடியாமல் ஓடிவிடுவார்கள். காதலை அருமையாக சொன்ன காதலன் படத்தை புதன் இரவு ஒளிபரப்புகிறார்கள்.

நவரச நாயகன் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக்

நவரச நாயகன் கார்த்திக்குடன், ரேவதி, குஷ்பூ நடித்து வெளிவந்த படம். ஆர்.வி. உதயகுமார் இயக்கம் என்று அப்போது உதயகுமார் படங்கள் வரிசையாக ஹிட்டடித்த சமயம். கார்த்திக் நடிப்பை ரசித்து பார்க்க வைத்த காலம் அது. இப்போது பார்க்கையில், எப்படி இருந்த கார்த்திக்..இப்போது மீண்டும் இப்படி நடிப்பாரா என்கிற ஏக்கத்தை வரவழைக்குது.இதை வரும் வியாழன் இரவு ஒளிபரப்ப உள்ளது சன் டிவி.

பதினெட்டு வயது இளமொட்டு மனது

பதினெட்டு வயது இளமொட்டு மனது

ரோஜா, சரத்குமார் நடிப்பில் வெளியாகி இசை அமைப்பாளர் தேவா நல்ல பாடல்களை கொடுத்து இருந்த படம் இது. இந்த படத்தின் பாடல்களுக்குப் பிறகுதான் இசை அமைப்பாளர் தேவா இன்னும் பிரபலம் ஆனார். இந்த படத்தில் இடம்பெற்ற பதினெட்டு வயது இளமொட்டு மனது பாடலை கந்தர் சஷ்டி கவசம் மெட்டில் இசை அமைத்தது அப்போது பிரபலமாக பேசப்பட்டது. போன் ஒயர் பிஞ்சி போயி ஒரு வாரம் ஆகுதுன்னு ஓமக்குச்சி நரசிம்மன் சொல்ல, அசடு வழிவதை வெளியில் காண்பிக்காமல், அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்வது செம காமெடியாக இருக்கும்.
இந்த படத்தை வரும் வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணிக்கு சன் டிவி ஒளிபரப்ப உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+