லவ்வர்க்கு பிறந்த நாள் வாழ்த்து லேட்டா சொல்லிட்டீங்களா...ஐ சூப்பர் ஐடியா....!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் வெற்றிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரம் கடந்துவிட்டது.
மலர் வெற்றியை கல்யாணம் செய்துக்கிட்டதும் ஒரு விபத்துதான்... மலரின் தங்கை அகிலா வெற்றியின் தம்பி புகழை கல்யாணம் செய்துக்கிட்டதும் ஒரு விபத்துதான்.
மலர் புருஷன் வெற்றி இப்போதான் மனம் மாறி மலரை லவ் பண்ண ஆரம்பிக்கறான். மலரும் அப்படித்தான்... வெற்றி மேல கொஞ்சம் கொஞ்சம் காதல் வந்துகிட்டு இருக்கு.

வாழ்த்து முதலில்
இந்த பிறந்த நாளுக்கு நான் அவர் கூட இருக்கேன்... 12 மணி வரைக்கும் முழிச்சிருந்து அவருக்கு வாழ்த்து சொல்லணும்னு மலர் முழிச்சுகிட்டு இருக்கா. அதுக்குள்ளே வெற்றியின் வீட்டார் கதவைத் தட்டறாங்க.

வாழ்த்து
வெற்றியின் அக்கா ரெண்டு பேரும் அவனை எழுப்பி பிறந்த நாள் வாழ்த்து சொல்றாங்க. மலருக்கு வருத்தமாப் போகுது. என்னடா இந்த வருஷ பிறந்த நாளுக்கு நாம் முதலில் வாழ்த்து சொல்லணும்னு இருந்தோம்..இப்படி ஆயிருச்சேன்னு.

கேக்
வெற்றியின் குடும்பத்தார் வீட்டின் நடு ஹாலில் பெரிய கேக்கை வச்சு வெற்றியை வெட்ட சொல்லி பிறந்த நாள் கொண்டாடறாங்க. வெற்றி எல்லாருக்கும் கேக் குடுத்துட்டு கடைசியா மலருக்கு குடுக்கறான். அவளும் வாங்கிகிட்டு ரூமுக்கு வந்து அழறா.

இப்போ என்னாச்சு?
என்னங்க மலர் நீங்க பாட்டுக்கு வந்துட்டீங்க.. கேக் சாப்டீங்களா இல்லையான்னு கேட்கறான்.அவ கண்களைத் துடைக்க எதுக்கு இப்போ அழறீங்கன்னு கேட்கறான். இல்லே.. இந்த பிறந்த நாளுக்கு நான்தான் முதன் முதலில் வாழ்த்து சொல்லணும்னு நினைச்சேன்...ஆனான்னு இழுக்க... என்னாச்சு இப்போ..கண்ணை மூடுங்கன்னு சொல்றான்.

ஆஹா சூப்பர்
அவள் கண்களை மூடி நிற்க கடிகாரத்தின் முள்ளை திருப்பி வச்சு இப்போ கண்ணைத் திறங்கன்னு சொல்றான். பார்த்தால்.. கடிகாரத்தில் 12 மணி ஆக இன்னும் ஒரு நிமிஷம் இருக்கு. இப்போ சரியா 12 மணி ஆனதும் வாழ்த்து சொல்லுங்க...ஓகேவான்னு கேட்கறான்.

ஐ நல்லாருக்கே
அவளும் 12 மணி ஆனது இவ வாழ்த்து சொல்றா... இப்போ இது உண்மையான மணி இல்லேன்னாலும் மனசுக்கு நீங்க செய்தது ரொம்ப சந்தோஷமா இருக்குங்கன்னு சொல்லி சிரிக்கறா மலர்... சந்தோஷமா இருந்தால் இதுவும் நல்லலாத்தானே இருக்கு...
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications