சூப்பர் மாம் குஷ்பூ நடத்தின ஜாக்பாட் மாதிரி இருக்குதே...!?
சென்னை: ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் நிகழ்ச்சி, ஜெயா டிவியில் முன்பு நடிகை குஷ்பூ நடத்தி வந்த ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மாதிரியே இருக்குது. இந்த வாரம் வரப்போகும் எபிசோட் ஸ்மார்ட் மாம் எபிசோடாம்.
ஸ்மார்ட் மாம் எபிசோடுக்காகத்தான் ஜாக்பாட் நிகழ்ச்சியில் வருவது போல மக்களிடம் ஒரு கேள்வி கேட்டு, டாப் பத்து பதில்கள் என்னவாக இருக்கும் என்று தெரிந்துக்கொண்டு, அந்த வரிசைப்படி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்கள் பதில் சொல்கிறார்களா என்று பார்ப்பது.
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜாக்பாட் நிகழ்ச்சியை நடிகை குஷ்பூ ஒரு டீச்சர் மாதிரி தொகுத்து வழங்கி வந்தார். பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக இந்த ஜாக்பாட் ஷோ இருந்தது.

ஜாக்பாட் ஜாக்கெட்
ஜெயா தொலைக்காட்சியில் பெண்களுக்கு என்று சிறப்பு நிகழ்ச்சியாக இந்த ஜாக்பாட் நிகழ்ச்சியை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கி வந்தார்.மிக நேர்த்தியாக டீச்சர் போன்று, படு சுறுசுறுப்பாகவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் குஷ்பூ. இவர் இந்த நிகழ்ச்சியில் உடுத்தி வரும் புடவைகளை விட அவர் அணிந்து வரும் ஜாக்கெட் மக்கள் மத்தியில் விரும்பி கவனிக்கப்பட்டு வந்தது. சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதுக்கு பிறகுதான் தமிழ்நாட்டு பெண்கள் விதம் விதமாக ஜாக்கெட் அணிய ஆரம்பித்தனர்.

சூப்பர் மாம்
ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவியின் பிரதான ஆங்கர் அர்ச்சனாவும், அவரது மகளும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் ஆசைப்பட்டு ரசித்து பார்க்க என்று எதுவும் சிறப்பாக இல்லை. வழக்கமாக தொலைக்காட்சி பிரபலங்கள் தங்கள் பிள்ளைகளுடன் கலந்துக்கொள்கின்றனர். ஒவ்வொரு எபிஸோடிலும் ஒவ்வொரு டாஸ்க் வைத்தார்கள். குழந்தைகளை எங்காவது விட்டுவிட்டு, மாம்களுக்கு க்ளூ மூலம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க சொன்னார்கள்.

குழாயடி சண்டை
குழந்தைகள் மிக முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய குழாயடி சண்டையை இரு அம்மாக்களை போட்டுக்கொள்ள சொன்னார்கள். அவர்கள் சண்டயில் விட்ட வார்த்தைகள் அவர்கள் சண்டையிட்ட விதம் இவற்றை குழந்தைகளை வேடிக்கை பார்க்க சொன்னார்கள். இப்படி ஒரு சில எபிசோட் கடந்தது.இப்போது ஸ்மார்ட் மாம் டாஸ்க் வரை வந்து இருக்கிறார்கள்.

ஸ்மார்ட் மாம் டாஸ்க்
ஸ்மார்ட் மாம் டாஸ்க்கில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி அவரது குழந்தை, நீபா அவரது குழந்தை கலந்துக்கொண்ட எபிசோடில் மக்களிடம் கேள்வி கேட்டு ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் முதல் 10 விடைகளின் படி சரியாக சொன்னால் மார்க். கணவர் ஆஃபீஸ் போகும்போது மறந்து விட்டுவிட்டு போகும் பொருள்கள் என்னென்ன? இது கேள்வி. சாந்தி மாஸ்டர் செல்போன் என்றார். மக்கள் சொன்ன 10 பதில்களில் அது இல்லவே இல்லையாம். நீபா ஃபைல் என்று சொன்னார் அலுவலகங்களில் இன்னும் ஃ பைல் மெயின்டெய்ன் பண்ணுகிறார்களா என்று கேட்ட அர்ச்சனா பதில் எண்னெவெண்று பார்த்தால், அந்த ஆப்ஷன் ஒன்பதாவதில் இருக்கிறது.

அடையாள அட்டை
அடையாள அட்டை 10 வது இடத்தில் இருக்கிறது. அடுத்து நீபா பர்ஸ் என்க, பர்ஸ் முதலிடத்தில் உள்ளது. எல்லா ஆண்களும் பர்ஸை மறந்துவிட்டு போவார்கள் போலும். இதற்கு நீபாவுக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்தது. அடுத்தடுத்து லன்ச் பாக்ஸ், வாட்ச் இதெல்லாம் சொன்னார்கள். பேனா,மூக்கு கண்ணாடி, தலைக்கவசம் போன்ற விடைகள் இருந்தன.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications