பனி விழும் இரவு... நனைந்தது நிலவு... இவங்களும் சூப்பர் மாம்தான்!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் சீசன் 2 வரும் ஞாயிறு முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி வருகிறது.
பல்வேறு பிரபலங்களான அம்மாக்கள், அவர்களின் பிள்ளைகள் என்று இந்த நிகழ்ச்சியில் அதாவது இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து போட்டி போடுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் உண்டு. கடைசி வரை டாஸ்குகளை செய்து பிள்ளைகளின் துணையோடு வெற்றி பெறுபவர் சூப்பர் மாம். இதன் இரண்டாவது சீசன்தான் இப்போது துவங்க உள்ளது.

நனைந்தது நிலவு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மவுனராகம். இந்த படத்தில் நடிகர் மோகன்மிக அமைதியான பொறுமையான ஹீரோவாக நடித்து பலரின் நெஞ்சங்களை கொள்ளைக்கொண்டு இருப்பார். இவருக்கு ஜோடியாக நடித்த அழகு ரேவதி நடிப்பிலும் அசத்தி இருப்பார்.இவர்கள் இருவரும் ஆக்ராவின் தாஜ்மகால் பின்னணியில் காதலுடன் அமர்ந்து இருக்க, அப்போது பனிவிழும் இரவு நனைந்தது நிலவு பாடலுக்கு ஆண் பெண் என்று இரு டான்சர்கள் நடனம் ஆடி இருப்பார்கள்.

நடன நடிகை
அந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை மாலினியம் ஒரு சூப்பர் மாம் என்று சொல்லலாம்.இவரின் பெண் ஸ்வேதாவும் ஒரு நடன நடிகையாக இருந்தாலும், தளபதி விஜயின் காவல்காரன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாகவும் நடித்து காமெடி செய்திருப்பார். இவரும் இவரின் மகளும்கூட ஜீ தமிழ் டிவியின் சூப்பர் மாம் போட்டியில் கலந்துக் கொள்கிறார்கள்.

யுவினா அம்மா
தல- தளபதி கூட நடிச்ச யுவினாவும் , விளம்பரத்துல அசத்திகிட்டு இருக்கிற யுவினா அம்மா தேவியும் சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்துக்கறாங்க. நடன இயக்குநர் மற்றும் நடன கலைஞர் சாந்தி தனது குழந்தையுடன் பங்கேற்கிறார். இவர்தான் மெட்டி ஒலி சீரியலின் பாடலுக்கு நடனமாடியவர்.

டான்ஸ் மாஸ்டர் சாந்தி
டான்ஸ் மாஸ்டர் சாந்தி மெட்டி ஒலி பாடலுக்கு நடனம் ஆடியதோடு, திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான குல தெய்வம் சீரியல் மூலம் சீரியல் நடிகையாகவும் களமிறங்கி உள்ளார். இப்போது சன் டிவியின் கல்யாண பரிசு சீரியலில் நடித்து வருகிறார்.. இவரும் தனது வாரிசோடு இந்த நிகழ்சசியில் கலந்துக் கொள்கிறார்.
இப்படி வித்தியாசமான பிரபலங்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் கலந்து கொள்ளும் இந்த சூப்பர் மாம் சீசன் 2 எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications