சூப்பர் சிங்கர் 10 வின்னர் காயத்ரி.. பரிசு பெற்ற நஸ்ரினுக்கு ரஹ்மான் சர்ப்ரைஸ்! அசத்தல் விஜய் டிவி
சென்னை: தமிழக மக்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 சீசன் கிராண்ட் பைனல், நேரு உள் விளையாட்டரங்கில் கோலாகலமாக நடந்தது.. இதில் முதல் பரிசு காயத்ரிக்கும், இரண்டாம் இடம் பெற்ற நஸ்ரினுக்கும், மூன்றாம் இடம் பெற்ற சாரா சுருதி மற்றும் ஆத்யாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் இறுதி போட்டிக்கு முன்னேறியவர்கள் அனைத்துமே பெண் போட்டியாளர்கள் ஆவர். கமல்ஹாசனும், ஏஆர் ரஹ்மானும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாகும். இது விஜய் டிவியின் தனி அடையாளமாகும்.. ஜூனியர், சீனியர் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு, இரண்டுமே பிரபலமாகிவிட்டது.

அடையாளம் தரும் நிகழ்ச்சி
நிறைய பாடகர்களுக்கு இந்த நிகழ்ச்சி அடையாளம் தந்து கொண்டிருக்கிறது. இதுவரை சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 9-வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்தது..
இந்த முறை சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியை பாடகர் மனோ, பாடகி சித்ரா, இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் நடுவர்களாக முன்னின்று நடத்தினார்கள்.. இந்த நிகழ்ச்சியையும் வழக்கம்போல் மாகாபா, பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்கி வந்தனர். சமீபத்தில் பிரியங்காவுக்கு நடந்த திருமணத்துக்கு பிறகு, அவர் சேனலைவிட்டு விலகிவிட்டதால், அவருக்கு பதில் லட்சுமி பிரியா தொகுத்து வழங்கினார்.
கிராண்ட் ஃபைனல்
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் நஸ்ரின், சாரா ஆத்யா, லைனட், காயத்ரி ஆகிய 4 போட்டியாளர்கள் ஃபைனலுக்கு முன்னேறினார்கள். இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தக் ஃலைப் படத்தின் ப்ரோமோஷனுக்காக இருவரும் பங்கேற்றனர்.
போட்டியாளர்கள் தலா 2 பாடல்களை பாடினார்கள். இதில், முதல் பரிசு பெற்ற காயத்ரி காயத்ரி எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இருந்து மதுர மரிக்கொழுந்து வாசம் பாடலை பாடியது ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்தது.
வெற்றியாளர்கள் அறிவிப்பு
இந்நிகழ்ச்சியின் வெற்றியாளரை கமல், ஏ.ஆர்.ரகுமான் இருவருமே சேர்ந்து அதிரடியாக அறிவித்தனர். அதன்படி காயத்ரி தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 சீசனில் டைட்டில் வின்னராக முதல் பரிசை தட்டி சென்றுள்ளார்.. 2வது இடம் நஸ்ரினுக்கும், 3வது இடத்தை சாரா ஸ்ருதி, ஆத்யா இருவருமே தட்டிச் சென்றனர்.
முதலிடம் பிடித்த காயத்ரிக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த நஸ்ரினுக்கு ரூ.10 லட்சமும், 3வது இடம்பிடித்த சாரா ஸ்ருதி, ஆத்யா ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம், பரிசாக வழங்கப்பட்டது.
நஸ்ரினுக்கு சர்ப்ரைஸ்
காயத்ரிக்கு டைட்டில் பரிசு தந்ததுமே, நஸ்ரின் சோகத்தில் காணப்பட்டார்.. கண்களில் கண்ணீர் தேங்கி கிடந்தது.. அவரது முகம் ஏமாற்றத்தில் இருந்ததை கண்ட, டி.இமான், சமாதானமும், ஆறுதலும் தந்து கொண்டிருந்தார்.. அந்த நேரத்தில் திடீரென ஏ.ஆர் ரஹ்மான், நஸ்ரியாவிடம் தன்னுடைய மியூசிக் ஸ்கூலில் சேர்ந்து கொள்கிறாயா? என்று கேட்டார்.. இதை நஸ்ரின் உட்பட மேடையிலிருந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.. உடனே நஸ்ரின் ஓகே என்று ரஹ்மானுக்கு தலையாட்டினார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications