சிரிச்சுட்டே இருப்பாரே சித்ரா.. இப்படி அழ வெச்சுட்டாரே பிரச்சன்னா! கண்ணீரில் மிதந்த சூப்பர் சிங்கர்
சென்னை: சூப்பர் சிங்கரில் இன்றைய இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றில் போட்டியாளர் பிரசன்னா பாடிய பாடலை கேட்டு போட்டி நடுவரும், பிரபல பாடகியுமான சித்ராவே கண்கலங்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. டாப் 20 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாதக்கணக்கில் பல்வேறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இடையே பல்வேறு வித்தியாசமான சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இறுதிச் சுற்றுக்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி உள்ளார்கள்.

அபிஜித் முதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அவரை தொடர்ந்து அருணாவும் அவருக்கு அடுத்து பூஜாவும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்கள். கடைசியாக பிரியா ஜெர்சனும், பிரசன்னாவும் மக்கள் வாக்கிற்காக அனுப்பப்பட்டு, அதில் பிரியா ஜெர்சன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
4 பேர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், 5 வது பைனலிஸ்டை தேர்வு செய்வதற்கான வைல்டு கார்டு சுற்று நடத்தப்பட்டது. இதில் எலிமினேட் ஆகிய சென்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுடன் பிரசன்னாவும் கலந்துகொண்டார். அதில் 10 பேர் கலந்துகொண்ட நிலையில் சிறப்பாக பாடிய 5 பேரை நடுவர்கள் தேர்வு செய்தனர்.
பிரசன்னா, ஹரி விக்னேஷ், கார்த்திக், அபர்னா, கேசவ் ஆகிய 5 பேர் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தங்களுக்கு விருப்பமானவரை மக்கள் தேர்வு செய்து இறுதிப்போட்டிக்கு அனுப்பலாம். இதில் லட்சக்கணக்கில் பிரசன்னாவுக்கு மக்கள் ஓட்டு போட்டு அவரை இறுதிப் போட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் மூலம், அபிஜித், அருணா, பூஜா, பிரியா ஜெர்சன், பிரசன்னா ஆகிய 5 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று உள்ளார்கள். இந்த நிலையில் இந்த வாரம் பிரீ பைனல்ஸ் சுற்று நடைபெற்றது. இதில் சிறப்பு நடுவர்களாக பாடகி சித்ரா, புஷ்பவனம் குப்புசாமி, அனந்த் வைத்தியநாதன், பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்துகொண்டார். இந்த வாரம் ப்ரீ பைனல்ஸ் சுற்றில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் 2 பாடல்களை பாடுகிறார்கள். சனிக்கிழமை சிறப்பான பாடல்களின் மூலம் நடுவர்களையும் ரசிகர்களையும் இசை மழையில் நனைய வைத்தனர் போட்டியாளர்கள்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 வது பாடலை அவர்கள் பாடினர். நேற்று ரஜினியின் "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடலை பாடி நடுவர்களின் பாராட்டை பெற்றார். இந்த நிலையில் இன்று ராம் படத்தில் வரும் "ஆராரிராரோ" பாடலை பாடி அனைவரையும் உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். அவரது பாடலை கேட்டு அங்கு அமர்ந்திருந்த பிரச்சன்னாவின் தாயும் கண்ணீர் வடித்தார்.
அதை தாண்டி நடுவராக இருந்த பாடகி சித்ராவும் எழுந்து நின்று கைத்தட்டி கண்கலங்கினார். அப்போது பேசிய அவர், "பிரசன்னா எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை." என்று சொல்லி கண்களை கசக்கினார். "உங்கள் அம்மா கூட கண்கலங்கிதான் உக்கார்ந்து இருக்கிறார்கள். ரொம்ப ஃபீல் பண்ணி பாடுனீங்க. நிஜமாகவே உள்ளே எங்கோ தொட்டது.
ரொம்ப அழகாக பாடுனீங்கள். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. உங்கள் அம்மாவின் இடத்தில் இருந்து ரசித்ததைபோல் நானும் ரசித்தேன். ஒரு தாய்க்கு நல்ல பிள்ளையாக நீங்கள் எப்போதுமே வாழனும். அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுத்து உங்கள் பாடலுடன் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க்கையில்." என்றார்.
பொதுவாகவே பாடகி சித்ரா என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது சிரித்த முகம்தான். மற்ற நடுவர்கள் சில சமயம் சற்று கடுகடுப்பாக நடந்துகொண்டாலும் சித்ரா, சிரித்த முகத்துடனே அனைத்தையும் கையால்வார். அவரது பாடல் திறனை தாண்டி அவரது அணுகுமுறையாலேயே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்டவரையே பிரசன்னா கண்கலங்க செய்துவிட்டார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications