தன் ஆசையை சொல்லி.. பாடகி "சித்ரா”வை அழ வைத்த குழந்தை.. தமன் கேட்ட கேள்வி.. ஆடி போன அரங்கம்
சென்னை: விஜய் டிவியில் சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் சீனியர் 9 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து புதியதாக குழந்தைகள் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 தொடங்கி இருக்கிறது.
இதில் பல குழந்தைகளுக்கான செலக்சன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு பார்வையற்ற குழந்தை சின்ன சின்ன ஆசை பாடல் பாடி தன்னுடைய பெரிய ஆசையை உலகத்திற்கு காட்டியிருக்கிறார்.

அந்த குழந்தை சொன்ன வார்த்தையை கேட்டு ஓடிப்போய் கட்டி அணைத்த சித்ரா கதறி அழுது இருக்கிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இது ஜூனியர், சீனியர் என்று மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் சீனியர் சூப்பர் சிங்கர் 9 பல மாதங்களாக ஒளிபரப்பாகி பின்பு முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து தற்போது சிறியவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வெற்றிகரமாக ஆரம்பமாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பார்வை குறைபாடு உடைய சிறுமி ஒருவர்," சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை..." என்ற பாடலை பாடியிருக்கிறார். அதற்கு அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா உனக்கு என்னென்ன எல்லாம் ஆசை இருக்கு..? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த சிறுமி சித்ரா அம்மாவை தொட்டு பேசணும் என்று ஆசை இருப்பதாக கூறுகிறார்.

உடனே பாடகி சித்ரா மேடைக்கு சென்று அந்த குழந்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கிறார். இதனைப் பார்த்த நடுவர் கண் கலங்கி அழுதிருக்கிறார். அதோடு பாடகர் தமன் மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்? என்று அந்த குழந்தையின் பெற்றோரிடம் கேட்கின்றனர். அதற்கு பிறவியில் இருந்த பிரச்சனை இருப்பதால் ஒன்னும் பண்ண முடியாது என்று கூறிவிட்டதாக அந்த சிறுமியின் பெற்றோர் கூறுகின்றனர்.
அதற்கு தமன் நானும் பேசிப் பார்க்கிறேன். மருத்துவர்களிடம் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறி நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது. அதோடு பாடகி சித்ராவிற்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம் என்பது அனைவருக்கும் தெரியும். காரணம் அவருக்கு பல வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகள் நந்தனா ஆட்டிசம் பாதித்திருந்த நிலையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததில் இறந்து விட்டார்.

தற்போது வரைக்கும் தன்னுடைய மகள் குறித்து நினைவில் வாழும் சித்ரா பல ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் தன்னை ஒரு குழந்தை தொட்டு பார்க்க வேண்டும் என்று சொன்னதை கேட்டு பூரித்து போன சித்ரா அந்த குழந்தையை ஆரத்தழுவி கண்ணீர் மல்க தன்னுடைய ஆசீர்வாதங்களை வழங்கி இருக்கிறார். இது உணர்வுபூர்வமாக இருப்பதாகவும் பார்க்கும்போது கண்ணீர் வருவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications