பிரியங்கா முதுகில் ஏறிய குட்டி கிருஷ்ணன்.. நாக்கு தள்ளிருச்சே.. என்னதான் நடக்குது அங்கே?
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், குண்டு குழந்தை ஹரி கிருஷ்ணனை உப்பு மூட்டை தூக்கி அரங்கத்தை ஒரு ரவுண்டு வருகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி, கடந்த இரண்டு வாரங்களாக நடைப்பெற்று வருகிறது. பங்கேற்றுள்ள குழந்தைகள் மிக அருமையாக பாடுகின்றனர். ஊட்டியில் இருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பாடும் ஒரு பெண் குழந்தை செம கியூட்.
திருநெல்வேலியில் இருந்து கலந்துக்கொண்டு நன்றாக பாடி அசத்தி வரும் ஹரி கிருஷ்ணனுக்கு செம வாய். இவரைத்தான் பிரியங்கா முதுகில் உப்பு மூட்டை சுமந்தபடி அரங்கத்தை ஒரு ரவுண்டு வருகிறார்.

வியக்க வைக்கும் குரல்கள்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வியக்க வைக்கும் குரல்களில் குழந்தைகள் பாடல்களை பாடி ரசிக்க வைத்து வருகின்றனர். பழைய பாடல்கள், புது பாடல்கள், பக்தி பாடல்கள் என்று எல்லா பாடல்களையும் மிக அருமையாக பாடி, நடுவர்களை கவர்ந்த வருகின்றனர். நடிகர் நகுலும் ஒரு நடுவராக பங்கேற்று உள்ளார்.

ரூபிக்ஸ் கியூப் சால்வ்
ரூபிக்ஸ் கியூப் சால்வ் செய்வதில் சர்வேஷ் என்கிற ஒரு சிறுவன் எக்ஸ்பர்ட்டாக இருந்தான். 3 நிமிடத்தில் சால்வ் செய்தால், பிரியங்காவுக்கு பனிஷ்மென்ட் தருகிறோம் என்று சொல்ல, சர்வேஷ் மூன்று நிமிடத்தில் ரூபிக்சின் அனைத்து கலர்களையும் ஒன்று சேர்த்து இருந்தான். அடுத்த கட்ட நடவடிக்கை பிரியங்காவுக்கு பனிஷ்மென்ட்.

உப்பு ஹரி கிருஷ்ணன்
பிரியங்கா ஹரி கிருஷ்ணனை தூக்கிக்கொண்டு அரங்கத்தை வலம் வர வேண்டும் என்பது பனிஷ்மென்ட். குண்டு பையன் ஹரி கிருஷ்ணனை பிரியங்கா உப்பு மூட்டைத் தூக்கிக் கொண்டு ஒரு சுற்று வந்தார். அவரின் கழுத்தை பையன் இறுக்கிக் கொண்டு விட்டான். கடைசியில் நாக்கு தள்ள ஹரி கிருஷ்ணனை இறக்கிவிட்டார் பிரியங்கா.

நாக்கு தொண்டை
பிரியங்கா நாக்கு தள்ள அவனை இறக்கிவிட்டுட்டு, தொண்டை வலிக்குது என்கிறார். பதிலுக்கு ஹரி கிருஷ்ணன் வெந்நீர் குடிங்கோ சரியாகிடும் என்று பெரிய மனிதன் போல சொன்னான். போயி உட்காருடா.. விட்டா சித்த வைத்தியம் சொல்லிக்கிட்டு இருப்பான்னு மாகாப சொல்ல... நிகழ்ச்சி இப்படி நகைச்சுவை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications